மார்கழி திங்கள்
வெண்ணிலா புரொடக்க்ஷன் சார்பாக சுசீந்திரன் தயாரித்து கதை வசனம் எழுத ..மனோஜ் k பாரதிராஜா இயக்கியிருக்கும் படம் மார்கழி திங்கள்….இதில் ஷ்யாம் செல்வன் கதாநாயகனாக அறிமுகமாக .,நாயகியாக ரக்க்ஷன நக்ஷா சரன் மற்றும் இவர்களுடன் முக்கிய வேடத்தில் பாரதிராஜா மற்றும் சுசீந்திரன் ஆகியோர் நடிசிருக்காங்க…
கதையின் நாயகி rakshana தன்னோட காதல் கதையை சொல்ல ஆரம்பிக்க கதை 1997 கால கட்ட கதையாக பொள்ளாச்சி யை சுற்றி நடக்குது…. பேத்தியாய் ரொம்ப செல்லமாக வளர்க்கும் தாத்தா ராமையாவாக பாரதிராஜா நடிக்க….ஸ்கூல்…எப்பவும் முதல் ரேங்க் எடுக்கும் மாணவி rakshana இம்முறை ரெண்டாம் ரேங்க் எடுக்க…முதல் ரேங்க் எடுக்கும் வினோத் மீது முதலில் கோபம் வருகிறது….அடுத்த முறை முதல் ரேங்க் நான் தான் எடுப்பேன் என்று நாயகி கவிதா சவால் விட….அதேபோல் முதல் ரேங்க் எடுக்கிறாள்…வினோத் விட்டு குடுத்து தான்..தான் முதல் ரேங்க் எடுக்க முடிந்தது என்று தன் தோழி … ஹேமா மூலம் தெரிய வர …கோபம் காதல் ஆக மாறுகிறது….இதற்கிடையே…தன் தாய் மாமன் சுசீந்திரன்…கவிதாவை தன் சாதிக்கார பையனுக்கு தான் கவிதாவை கட்டி தரணும் ..னு ராமையாவிடம் மிரட்ட அவரும் படிப்பு முடியட்டும்… னு அந்த சூழலை லாவகமாக கையாலுகிறார்..கவிதாவோ தன்னுடைய காதலை தாத்தா விடம் கூற …முதலில் தவிர்த்த அவர் பின் பேத்தியின் ஆசைக்கு இணங்க அவளிடம் நானே கல்யாணம் பண்ணி வைக்கிறேன் …வினோத் படிப்பு முடித்து வரட்டும் என்று சொல்ல…வினோத் படிப்பை முடித்து வந்தானா? .. தாத்தா சொன்னபடி கல்யாணம் செய்து வைத்தாரா ?? இல்லை தாய் மாமன் சொன்னபடி தன் சாதி மாப்பிள்ளைக்கு கட்டி வைத்தாரா என்பது தான் மீதி கதை….
அறிமுக நாயகனாக ஷ்யாம் செல்வன் குடுத்த கதாபாத்திரத்தை ஏற்று நடிக்க….நாயகி யாக வரும் rakshana படத்தின் இரண்டாம் பாதியை வலு சேர்க்க…ஏமாற்றத்தினை உள் வாங்கி…பழி வாங்கும் இடத்தில் நல்லா நடிசிருக்காங்க ..தோழியாக வரும் நக்ஷா சரன்…மற்றும் அப்பு குட்டி ஆகியோர் குடுத்த கதாபாத்திரத்தில் நடிக்க…வில்லனாக சுசீந்தரன் மிரட்டும் விழிகளோடு நடிசிருக்காரு….சாதி கலந்த காதல் கதையினை….இறுதியில் ஒரு twist குடுத்து நல்ல முறையில் இயக்கியிருக்கிறர் மனோஜ் k .பாரதிராஜா…