வினில் வர்கீஸ் இயக்கத்தில் காளிதாஸ் ஜெயராம், நமிதா பிரமோத் , ரெபா மோனிகா பிரியங்கா சாய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் அவள் பெயர் ரஜினி. ..மேலும் இவர்களுடன்
அஸ்வின் குமார், சைஜு குருப், கருணாகரன், ரமேஷ் கண்ணா, மறைந்த ‘பூ’ ராமு ஆகியோர் நடித்துள்ளனர்.

ஆள் நடமாட்டம் இல்லாத இரவு நேரத்தில் சைஜு குருப் (அபஜித் ) தனது மனைவியுடன் கார்.ல் செல்ல … டீசல் தீர்ந்த நிலையில் மணைவி யை கார் -ல் இருக்க சொல்லிவிட்டு டீசல் வாங்க செல்லுகிறார் குரூப்…இந்நிலையில் கார் -ன் மேலிருந்து கொலையாளி அவரை (நமிதா) கொல்ல முயல அவ்வழியே சென்ற இளைஞர்கள் அவரை காப்பாற்றி ஹாஸ்ப்பிட லில் சேர்க்கிறார் கள்…இதற்கிடையே சைஜூ குருப் கொடூரமான முறையில் கொல்லப்பட…இதனை விசாரிக்கும் போலீசாரிடம்….நமிதா பிரமோத் ஐ காப்பாற்றிய இளைஞர்கள்.,அந்த கொலையை செய்ய முயன்றது பேய் என்றும், இல்லை, இல்லை அது பேய் மாதிரி இருக்கும் பெண் என்றும் சொல்லி குழப்ப…போலீசாரும் நமிதா விடமும், சைஜு குருப் – ன் நண்பனிடம் விசாரிக்க… அவரோ, தன்னை யரோ ஃபாலோ பண்ணுவதாக அபஜித் சொல்லி கேட்டிருக்கிறேன் என போலீஸிடம் சொல்லுகிறார் … இதனிடையே குரூப் -ன் கொலைக்கும் அவரை ஃபாலோ செய்த அந்த பெண் னிற்கும் எதோ சம்பந்தம் இருப்பதை உணர்ந்து காவல் துறை உதவியுடன் நமிதா பிரமோத்- ன் தம்பியான காளிதாஸ் ஜெயராமும் தேட முயலும் போது கிடைக்கும் பகிர் சம்பவங்களே ” அவள் பெயர் ரஜினி “

வழக்கமான பழி வாங்கும் கதை யாக இருந்தாலும், திரைக்கதையின் நேர்த்தியும்…கதை யின் நடுவே சில சுவாரஸ்யமான விஷயங்களை யும் வைத்து ரசிக்கும் படியான கதை யை சொல்லியிருக்கார் இயக்குனர்..

ஜெயராம் காளிதாஸ் தன் அக்காவை காப்பாற்ற முயலும் ஒவ்வோர் இடத்திலே யும், நிதானமான நடிப்பை வெளிப்படுத்தி முழு கதையை யும் தாங்கி, யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்காரு.

படத்தின் பலமே திருநங்கை யாக வரும் பிரியாங்கா சாய் தான்…அவர் அச்சு அசலாக ,.அந்த கதாபாத்திரத்திற்கு ஏற்புடயவராக தெரிவதுடன், படத்தின் இரண்டாம் பாதி யை முழுவதுமாக ஆக்ரமித்து அப்பாவி பென் ஆகவும்,சில இடங்களில் மிரட்டலான வில்லியாகவும், ரஜினி ரசிகை யாக துள்ளலான ஆட்டத்துடன் நடித்தும் ஸ்கோர் பண்ணியிருக்கார்..

போலீஸ் அதிகாரி யாக வரும் அஸ்வின் குமார் …காளிதாஸ் குடுக்கும் எவிடன்சி ன் உதவியோடு மட்டுமே குற்றவாளியை கண்டுபிடிப்பது போல் தெரிகிறது..ஃபிளாஷ் பேக் காட்சி யில் இடம் பெற்ற சிக்கல்களை ஒரு இடத்திலும் அக்கா, பாசமிகு தம்பிக்கு தெரிவிக்க வில்லை .. இது போன்ற லாஜிக் மீறல் களை யோசிக்காமல் பார்த்தால் ஒரு விரு விறுப்பமான க்ரைம் த்ரில்லர் கதை யை 4 music இசையில் ரசிக்கும் படியாக கொடுத்திருக்காரு இயக்குனர் வினில் வர்கிஸ்…