
அறிமுக இயக்குநர் அப்பாஸ் அன்சாரி ரஹ்மத் இயக்கி 96 பட புகழ் கோவிந்த் வசந்தா இசையமைத்து வெளியாகியிருக்கும் படம் ஃபைட் கிளப்.
இப்படத்தில் உறியடி விஜய் குமார், மோனிஷா மோகன் மேனன், கார்த்திகேயன் சந்தானம், சங்கர் தாஸ், அவினாஷ் ரகுதேவன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
வடசென்னை பகுதியை மையமாக கொண்டு அங்கு நடக்கும் பிரச்சனையை வைத்தே ரண களத்தோ டு அதிரடியாய் உருவாகி உள்ள படம் ஃபைட் கிளப்.
பாக்ஸிங் ஐ உயிராக நினைத்து வாழும் பெஞ்சமி ன் திறமை இருந்தும் வட செண்ணைக்காரன் என்ற லேபிள் அவரை தடுக்க பெரிதாக வெற்றி பெற இயலாமல் போகிறது. இதனிடையே , அந்த ஊரில் இருக்கும் சிறுவன் செல்வாவிர்க்கு football coach க்கு பணம் கொடுத்து உதவ முயலுகிறார். அவர் தம்பி ஜோசப்போ கஞ்சா விற்கும் கிருபாவுடன் சேர்ந்து கொண்டு ஊருக்குள் கஞ்சா விற்று முன்னேற துடிக்கிறான்..இதை பலமுறை பெஞ்சமின் கண்டித்தும் தம்பி கேட்ட பாடில்லை. இதனை தனக்கு சாதகமாக்கி கொண்ட கிருபா ஜோசப் ஐ தூண்டி விட கிருபாவுடன் சேர்ந்து கொண்டு அண்ணனை தீர்த்து கட்டுகிறான் தம்பி ஜோசப்.
இந்த சம்பவத்தில் யார் ஜெயிலுக்கு போவது என்ற பேச்சு வர, ஜோசப்பை ஜெயிலுக்கு போக சொல்லி தான் ஒரு வாரத்தில் வெளியே எடுத்து விடுவதாக நம்பிக்கை கொடுக்க, அதனை நம்பி ஏமாறும் ஜோசப், ஜெயிலில் இருந்து வெளியே வந்து – கிருபா வை பழி வாங்க, செல்வா (விஜயகுமார்) வை பகடை காய் ஆக வைத்து பழி வாங்க நினைக்கிறான்…
இதில் ஜோசப் ஜெய்த்தானா ?? பெஞ்சமினி ன் ஆசை நிறைவேறியதா ?? என்பதே மீதிக் கதை.
செல்வா வாக நடித்து இருக்கும் விஜயகுமார் வட சென்னை இளைஞனாக துடுக்கான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
இவருக்கு ஜோடியாக நடித்த மோனிஷா மோகன் ன் பங்கு மிக குறைவாக இருந்த போதிலும் அவர் வரும் இடத்தில் பளிச் என தெரிகிறார்…நொடிக்கு நொடி வரும் சண்டை காட்சிகளினா ல் படத்தின் விறு விருப்பு அதிகமாக, கோவிந்த் வசந்தா வின் இசை துணை போகிறது…வடசென்னையில் இருக்கக்கூடிய பிரச்சினைகள் குறித்து பல படங்கள் இதே கதை களத்தில் வந்து விட, footbal காட்சிகளை வைத்து இன்னும் கொஞ்சம் சுவாரசியமாக எடுத்திருக்கலாம்..ஆக மொத்தத்தில் இளசுகளை கட்டாயம் கவரக்கூடிய படம் ஃபைட் கிளப்… .