மதுரா டாக்கீஸ் மற்றும் ஆஞ்சநேயா ப்ரொடக்ஷன் சார்பில் K.கந்தசாமி மற்றும் K. கணேசன் வழங்கும் படம், ‘வட்டார வழக்கு’. ‘டூலெட்’ சந்தோஷ் ஸ்ரீராம், ரவீனா ரவி, வெங்கடேசன், விசித்திரன் உட்பட பலர் நடித்துள்ளனர்.
இயக்கம் கண்ணுச்சாமி ராமச்சந்திரன் ..

மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியில் , சேங்கை, (சந்தோஷ் ஶ்ரீராம்) கும் அவரது பங்காளி களுக்கும் இடையே பல தலைமுறைகளாக பகைமை நிலவி வர எதிராளி குடும்பத்தில் உள்ள சிலரை கொன்று விடுகிறார். இந்த கொலைக்கு பழி வாங்க முயல்கிறார்கள் கொலை செய்யப்பட்ட நபரின் குடும்பத்தினர்.அவர்கள் எண்ணம் நிறைவேறியதா ? இல்லையா ? என்பதே மீதிக் கதை.

சேங்கை யாக வரும் சந்தோஷ் கிராமத்து சண்டியராக வந்து குடுத்த கதாபாத்திரத்தை உள் வாங்கி நடிச்சிருக்காரு ..சண்டியன் ஆக நெஞ்சை நிமிர்த்தி சண்டை யிடும் இடத்திலேயே யும் சரி, கன் சிமிட்டி காதலியை லவ் பண்ணும் இடத்திலே யும் சரி… அளவான நடிப்பை கொடு த்திருக்காரு.
சில குறிப்பிட்ட நடிகர்களை தவிர பெரும்பான்மையான நடிகர்கள் கதை நடக்கும் இடத்தில் உள்ள அவ்வூர் மக்களை கொண்டே நடிக்க வைத்துள்ளது இப்படத்தின் சிறப்பு… வசன உச்சரிப்பு சில இடங்களில் புரிய வில்லை என்றாலும் காட்சி பதிவு பார்வையாளனை அப்படியே கிராமத்திற்கு அழைத்து சென்று விடுகிறது.

நாயகி ரவீனா ரவி கிராமத்து பெண்ணாக , தொட்டிச்சி கதாபாத்திரத்தில் சிறந்த நடிப்பை தந்துள்ளார். சில இடங்களில் பருத்திவீரன் முத்தழகு வை ஞாபகப் படுத்துகிறார்..

1987 கால கட்டத்தில் இளையராஜாவின் இசையில் வெளியான சில பாடல்களை ஆங்காங்கே ஒலிக்க விட்டு, அக் காட்சியில் வரும் காதலின் அழுத்தத்தை நம்மையம் உணர வைக்கிறார்கள்.

இரத்தமும் சதையும் மாய் வரும் இப்போதைய படங்களுக்கு நடுவில், மாற்று படமாக சுரேஷின் ஒளிப்பதிவில்
கரிசல் காடும் அழகாய் தெரிய…

இளையராஜா இசையில் கிராமத்து மக்களின் உணர்வ, உடல் மொழி யை அவர்களின் வட்டார வார்த்தைகளுடன்.. ரசிக்கும் வகையில்.ஒரு அருமையான காதல் கதையை கொண்டு யதார்த்த படமாக வாந்திருக்கு..” வட்டார வழக்கு”..