
அறிமுக இயக்குனர் ரமேஷ் வெங்கட் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது.
இப் படத்தில் யாஷிகா ஆனந்த், , கோபி, சுதாகர், ஹரிஜா, ஆஷிக் உசேன், நந்தகோபால கிருஷ்ணன், அப்துல் லீ, ஜாங்கிரி மதுமிதா, ஜார்ஜ் மரியன், முனிஷ்காந்த், ரித்விகா, சந்தோஷ் பிரியன், ஷா, விஜய்குமார் ராஜேந்திரன், சத்தியமூர்த்தி சாருகேஷ், சேனாதிபதி தர்மா என ஏ கப்பட்ட நடிகர் பாட்டாளமே நடித்துள்ளனர்.
இசை – கௌஷிக்
ஓர்இரவில் திரையரங்கில் நடக்கும் கதை. நான்கு தனித்தனியாக இருக்கும் கும்பல் ஒரு திரையரங்கிற்கு படம் பார்க்க வருகின்றனர், அப்படி வரும் அவர்கள் அங்கிருக்கும் நான்கு பேயிடம் மாட்டிக்கொள்கின்றனர். அந்த அமானுஷ்ய நிகழ்வுகளில் இருந்து தப்பித்து, எப்படி வெளியே வருகின்றனர் என்பதே இப்படத்தின் கதை.
தற்போது பிரபலமாக இருக்கும் யூ ட்யூபர் களான கோபி சுதாகர், ஹரிஜா போன்று யாருமே பிரபலம் ஆகாத காலத்தில் எடுத்துள்ள படம். எருமசானி விஜய் மற்றும் ஹரிஜாவின் காமெடிகள் ரசிக்கும்படியாக இருக்கு…கோபி சுதாகர் வழக்கம் போல உடல் மொழி யால் அசத்த, முணிஷ்காந்த் வித்யாசமாக வில்லன் வேடத்தில் நடிச்சிருக்காரு. அத்தனை கேரக்டர்கள் இருந்தும், ஒவ்வொருவருக்கும் தனித் தனியாக முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கி இருப்பதற்காகவே இயக்குனரை பாராட்டலாம்…..
படத்தின் முதல் பாதியில் இசையை மட்டுமே வைத்து பயம் காட்டி, இரண்டாவது பாதியில் அதை தவற விட்டுவிட்டனர்..
பெரிதாக லாஜிக் பார்க்காமல் பேய் படங்களை பார்த்து ரசிக்கும் ரசிகர்களால் ‘ ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது’ ஓடினால் நன்றாக இருக்கும்.
