அமர் ராமச்சந்திரன் தயாரிப்பில் அபிலாஷ் தேவன் இயக்க, சஸ்பென்ஸ் த்ரில்லர் படமாக வந்திருக்கு….ஜித்தன் ரமேஷ், அஞ்சு பாண்டியா, ஹரிஷ் பேரடி, அகில் பிரபாகர், அனுஸ்ரீ போத்தன், ஜார்ஜ், நிகில் அமர், அருவி மதன் ஆகியோர் நடிசிருக்காங்க..

இளம் காதல் ஜோடி ஒன்று விடுமுறையை கழிக்க, காரில் பயணம் செய்கின்றனர்… இரவு அடர்ந்த காட்டின் வழியே செல்ல, ‘ இரவு அந்த பக்கம் செல்ல கூடாது’ என்ற வழி பலகையை கவனிக்காமல் தவறான வழயில் சென்று இரவு பொழுதை அங்கேயே கழிக்க்கும் போது, காட்டுவாசி ஒருவனால் தாக்கப்பட்டு குகையில் அடைந்து கிடைக்கிரார்கள், இதற்கிடையில் இவர்கள் காணாமல் போனதாக கம்ப்ளைன்ட் வரவே, அவர்களை தேடி போலீஸ் விரைகின்றது. இவர்களை அடைத்து வைத்த காட்டு வாசி யார் ? அவனுக்கும் இவர்களுக்கும் என்ன சம்மந்தம் ? போலீஸ் இவர்களை கண்டு பிடித்ததா ? என்பதின் விடையே பின்பாதி கதை..

ஜித்தன் ரமேஷ் இதுவரை இல்லாத வகையில் ஒரு வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.நாயகியாக வரும் அஞ்சு பாண்டியா காடு மேடு என திரிந்து சகதியில் உருண்டு, கடினமான உழை ப்பை  கொட்டியிருக்காரு. ஹரிஷ் பேரடி மற்றும் அருவி மதன் ஆகியோர் குடுத்த கதாபாத்திரத்தில் சரியாக நடிக்க, சத்தியமங்கலம் காட்டுப்பகுதியை அழகாக படம் பிடிச்சு காட்டியிருக்காரு ஒளிப்பதிவாளர் பிரசாந்த் பிரணவம்

ஒளிப்பதிவு, பின்னணி இசை, எடிட்டிங் ஆகிய மூன்றும் ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் படத்திற்கு ஏற்றவாரு கன கச்சிதமாக உள்ளது. 

ரூட் நம்பர் 17. இயக்குநர் அபிலாஷ் தேவனின் சினிமா பாதைக்கு சரியான வழிகாட்டி ..