ராயல் எண்டர்பிரைசஸ் சார்பில் டி. குமாரதாஸ் தயாரித்து கெவின் ஜோசப் இயக்கத்தில் வந்திருக்கும் படம் கும்பாரி..இப்படத்தை . படத்தை 9Vஸ்டுடியோஸ் வெளியிடுகிறது

விஜய் விஷ்வா, மஹானா சஞ்சீவி, பருத்திவீரன் சரவணன், நலீப் ஜியா, ஜான் விஜய் ,சாம்ஸ் ,மதுமிதா, மீனாள், ராயன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

,இசை- ஜெய்பிரகாஷ், ஜெய்சன், பிரித்வி, ஒளிப்பதிவு -பிரசாத் ஆறுமுகம்,
எடிட்டர் – T.S.ஜெய்,

கன்னியாகுமரிப் பகுதியில்கேபிள் டிவி ஆபரேட்டரான விஜய் விஷ்வாவும் மீன் பிடி தொழில் செய்பவரான நலீப் ஜியாவும், . பெற்றோர்களோ, உறவுகள்ளோ யாரும் இல்லாத காரணத்தால் அவர்கள், இருவரும் ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்காமல் கும்பாரி (நண்பா) என்று அழைத்து நண்பர்களாக வாழ்கிறா ர்கள்

ஒரு நாள் நாயகி மஹானாவை நாலைந்து ரவுடிகள் துரத்திக் கொண்டு ஓட விஜய் விஷ்வா அந்த ரெளடிகளை அடித்து துவம்சம் செய்கிறார். அடி வாங்கிய ரவுடிகள் “என்ன நீ நிஜமாகவே அடிக்கிறாய்?” என கேட்க மஹானா வோ தான் நடத்தும் யூடியூப் சேனலுக்காக எடுக்கப்படும் ஒரு பிராங்க் வீடியோ என்று. சொல்ல மஹானாவை அறைந்து விட்டு விஜய் விஷ்வா செல்ல,
விஜய் விஷ்வாவின் துணிவும் அவரது குணமும் பிடித்துப் போய் மஹானா ,அந்த மோதலுக்கு பின் காதலில் விழுகிறார். அண்ணனுக்கு (ஜான் விஜய்) தெரியாமல் இருவரும் திருமணம் செய்து கொள்ள முயல மஹானாவுக்குத் திருமண வயது 21 முடிய இன்னும் 7 நாட்கள் மீதம் உள்ளன ..என்று ரிஜிஸ்தர் அலுவலகத்தில் சொல்ல, அந்த ஏழு நாட்களை எப்படியாவது சமாளித்து திருமணம் செய்து கொள்ளலாம் என்று திட்டமிட்டு ஒவ்வொரு ஊராக ஓடுகிறார்கள்…இந்த விஷயம் தெரிந்து அண்ணன் அவர்களை துரத்த, ஒரு கட்டத்தில் விஜய் விஷ்வாவின் நண்பன் காணாமல்…அவனை மஹானாவின் அண்ணன் தான் கடத்தி வைத்திருக்கிறான் என்று அவன் மேல் பழி விழ, கோர்ட் வரை செல்கிறார்கள்.. கோர்ட் என்ன சொல்கிறது ?..திருமணம் நடந்ததா ? நண்பன் கும்பாரி கிடைத்தானா ? இப்படி பல கேள்விகளின் விடையே படத்தின் இரண்டாம் பாதி.

காதலுடன் அண்ணன் தங்கை பாசத்தையும் வைத்து இயக்கி இருக்கிறார் இயக்குநர் ..அருண் பாத்திரத்தில் நடித்துள்ள கதாநாயகன் விஜய் விஷ்வாவும்,அவரது நண்பனாக வரும் ஜோசப் நன்றாக நடித்துள்ளார். குறிப்பாக நண்பன் ஜியா விற்க்கு அதிக காட்சிகள் கொடுத்திருக்கலாம்.
தர்ஷினி கதாபாத்திரத்தில் கதாநாயகியாக நடித்துள்ள மஹானா அளவான அழகுடன் அளவான நடிப்பையும் கொடுத்துள்ளார்.

நகைச்சுவை நடிகையான மதுமிதா மற்றும் ஜான் விஜய் குடுத்த கதாபாத்திரத்தில் அளவுக்கு அதிகமாக நடிசிசிருக்கிரார்கள்.

கும்பாரி என்பது நண்பன் என்கிற பொருள் படும் சொல்லாகப் படத்தில் கூறப்படுகிறது.