ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் ஒரு முழுமையான சயின்ஸ் ஃபிக்‌ஷன் படமாக வெளியாகியிருக்கு அயலான்..சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் பிரீத்சிங் நடிசிருக்காங்க.

விண்வெளியில் இருந்து பூமியை தாக்கிய ஒரு விண்கல்லில் இருந்து சிதறிய ‘ஸ்பார்க்’ எனப்படும் சிறு கல், வில்லனின் (சரத் கேல்கர்)கையில் கிடைக்க அதைக் கொண்டு பூமியின் மையப்பகுதி வரை தோண்டி, அதில் கிடைக்கும் வளங்களை அபகரிப்பதே வில்லனின் நோக்கம்.
இன்னொரு பக்கம், நாயகன் சிவகார்த்திகேய-னோ கிராமத்தில் விவசாயம் செய்து சுற்றுச்சூழல் பாதுகாப்பிலும் தீவிர அக்கறை கொண்டவராக, சிறு உயிருக்கும் தீங்கு இழைக்காதவராக வாழ்ந்து வருகிறார். தன் அம்மா வாங்கிய கடனை அடைக்க வேண்டி சென்னை வரும் அவர், பிறந்தநாள் பார்ட்டி க்கு சர்ப்ரைஸ் செய்யும் குழு வான கருணாகரன், யோகிபாபு டீமுடன் வந்து சேருகிறார்..

பூமியில் விழுந்த ஸ்பார்க் ஐ தேடி வேற்று கிரகத்தில் இருந்து ஒரு ஏலியன் வர, அது வந்து இறங்கிய ஸ்பேஸ் ஷிப் வில்லன் கும்பலிடம் அகப்பட, அதனை மிக பாதுகாப்பாக வைத்திருக்கிறார்கள்… அதையரிந்து, ஏலியன் அதனை எடுக்க முயலுகையில் அவர்களால் தாக்கப்பட்டு, தனது விண்கலத்தையும் இழந்து, பள்ளி சிறுவர்களிடம் மாட்டி ஒரு வழியாக சிவகார்த்திகேயனை வந்துடைகிறது…சிவகார்த்திகேயனும் ஏலியனும் கூட்டு சேர, அவர்கள் அந்த வில்லனின் செய்ல்களை முறியடித்து ஸ்பேஸ்ஷிப் ஐ பெற்று, அயல் கிரகத்துக்கு ஏலியன் சென்றதா ? இல்லையா? என்பதே மீதி கதை….

மிரட்டும் கிராபிக்ஸ் காட்சிகளோடு மட்டுமில்லாமல், அத்தனை நேர்த்தியாக குறிப்பாக, ஏலியனை உருவகப்படுத்தி, அதன் உடல்மொழி கூட ரசிக்கும்படி துல்லியமாக உருவாக்கியிருக்கும் தொழில்நுட்பக் குழுவினருக்கு முதலில் பாராட்டுகள். டாட்டூ வாக வரும் அயலானு க்கு ..நடிகர் சித்தார்த் குரல் கொடுக்க, அயலான் அட்டகாசம்…பல வருட காத்திருப்புக்கு பிறகு சிவகார்த்திகேய னுக்கு இது ஒரு பிளாக்பஸ்டர் படம்…. ஏ ஆர்.ரகுமானின் இசை யில் ‘சுரோ சுரோ ‘ பாடல் சூப்பர் ஹிட்.. பொங்கலுக்கு வெளியாகியிருக்கும் அயலான் குழந்தைகளை கவரும் வகையில் மாஸ் ஆக வந்திருக்கு….