
ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி கத்ரீனா கைஃப், ராதிகாசரத் குமார் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் மேரி கிறிஸ்துமஸ்…
அறிமுகம் இல்லாத இரு நபர்கள், அதுவும் குறிப்பாக, திருமண வாழ்க்கையில் சந்தோஷம் இல்லாத ஒரு பெண்னும், தற்செயலாக சந்தித்த ஒரு ஆணும், ஓர் இரவினை கடக்கும் கதை…
துபாயில் இருந்து மும்பைக்கு வரும் ஆல்பர்ட்(விஜய் சேதுபதி), தன் வாய் பேச முடியாத மகளுடன் இருக்கும் மரியா (கத்ரீனா கைப்)வை கிரிஸ்துமஸ் அன்று bar இல் பார்க்க நேரிடுகிறது….ஏற்கனவே கணவனுடன் பிரச்சனை யில் இருக்கும் மரியா, கணவனை பழிவாங்க அவருக்கு ஒத்தாசையாக கூடவே வரும் ஆல்பர்ட் டுடன் நேரம் செலவிட விரும்புகிறார்…
மகளை வீட்டில் தூங்க வைத்துவிட்டு ஆல்பர்ட்டுடன் வெளியே சென்று திரும்பி வர, வீட்டில் தன் கணவர் கொலை செய்யப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார்….உடனே போலீசாருக்கு தகவல் கொடுக்க முடிவு செய்யும் வேளையில் ஆல்பர்ட் டோ தடுமாறி தான் முதலில் கிளம்புகிரேன் பிறகு நீ போலீசுக்கு தகவல் கொடு என்று சொல்ல, அதனை கேட்டு அதிரும் மரியாவிடம் தான் ஒரு என்ஜினியர் இல்லை, கொலை குற்றத்தில் இருந்து விடுதலையாகி வெளி வந்தவன் என்கிற உண்மையை சொல்லி வெளியேறுகிறார்

அது தற்கொலை என்ற பாணியில் விசாரணை செல்ல , ஒரு கட்டத்தில் அது தற்கொலையா? அல்லது கொலையா ? என விசாரணை மேலும் வலுவடைய ஆரம்பிக்க, மரியாவின் கணவர் ஏன் கொலை செய்யப்பட்டார், யார் கொன்றார்கள், துபாயில் இருந்து வந்த ஆல்பர்ட் யார் அவரது பின்புலம் என்ன என்பதை சுவாரஸ்யமாக திரையில் காட்டியிருக்கிறார் இயக்குநர் ஸ்ரீராம் ராகவன்.
விஜய் சேதுபதியும், கத்ரீனா கைஃபும் குடுத்த கதாபாத்திரத்திற்கு ஏற்ப, ஆல்பர்ட் மற்றும் மரியாவாகவே வாழ்ந்திருக்கிறார்கள். வழக்கம் போல ராதிகா சிறப்பாக நடிக்க…சண்முகராஜனின் நடிப்போ அதையும் தாண்டி அவரை மிஸ் பண்ண முடியாதபடி நடித்திருக்கிறார்.
படத்தின் பல்வேறு காட்சிகளில் இருக்கையின் நுனிக்கு வரவழைத்த இயக்குனர் கடைசி 20 நிமிடத்தை பரபரப்பாகி நச் என ஒரு climax கொடுத்து…ஒரு தரமான படத்தை கொடுதிருக்காரு இயக்குனர் ஸ்ரீராம் ராகவன்.
