
ஏ.எல் விஜய் இயக்கத்தில் அருண் விஜய், எமி ஜாக்சன், நிமிஷா சஜ்ஜயன் ஆகியோர் நடிப்பில் வெளிவந்துள்ள திரைப்படம் மிஷன் சாப்டர் ஒன்.
இசை -ஜிவி பிரகாஷ்.
அருண்விஜய்(குணசீலன்) தன் மகள் சனாவின் (இயல்) சிகிச்சைக்காக லண்டன் செல்கிறார்.மருத்துவமனையில் ஆபரேஷனுக்கு ஆகும் தொகைக்கு ஹவாலா மூலம் பணம் ஏற்பாடு செய்ய கிளம்பும் குணசீலன் ஹாஸ்பிடலில் இருக்கும் நர்ஸ் நிமிஷா சஜ்ஜயனிடம், தன் மகளை பார்த்து கொள்ளும் படி சொல்லிவிட்டு கிளம்புகிறார். திடீரென வழியில் ஒரு திருட்டு கும்பலிடம் மாட்டிக்கொள்ளும் குணசீலன், அடிதடியில் இறங்க, தவறுதலாக போலீ ஸை அடிக்க நேரிடுகிறது.அதனால் அவர் லண்டனில் உள்ள ஒரு சிறைச்சாலையில் அடைக்கப்படுகிறார். அதே சிறை யில் வார்டனாக இருக்கும் எமி யிடம், தான் நிரபராதி என்றும் தவறு செய்யவில்லை, மகள் ஆஸ்பத்திரியில் இருக்கிறார் எனக்கு உதவுங்கள் என்று கேட்க எமியோ மறுத்து விடுகிறார். இதனிடையே
அந்த சிறையில் 3 தீவிரவாதிகளை தப்பிக்க வைக்க, முயற்சி செய்யும் வில்லனின் திட்டத்தை முறியடித்து, எமிக்கு உதவுகிறார்..இதனால் ஆத்திரமடைந்த வில்லனோ, ஜெய்லரை அழைக்க, அருண் விஜய் யோ ஏன் என்று கேட்க,? அருண் விஜய் யார் ? அவருக்கும் வில்லனுக்கும் என்ன தொடர்பு?, இதிலிருந்து தப்பித்து தன் மகளிடம் எப்படி சென்றடைகிறார் என்பதே மீதி கதை..
கொஞ்சம் சென்டிமென்ட், நிறைய ஆக்ஷன் நடுவில் தீவிரவாதம் என பல கோணங்களில் கதை சொல்லியிருக்கிறார் இயக்குனர்..

மிரட்டலான நடிப்பில் அருண் விஜய். அவரின் உடல் வாகுக்கு ஏற்ற கதை என்பதனாலேயே, அதிக சிர த்தையுடன் நடிச்சிருக்காரு.
படத்தின் மிகப்பெரிய பலம் சண்டைக்காட்சி தான், அதிலும் ஜெயிலுக்குள் கைதிகள் அனைவரும் வெளியே தப்பிக்க முயற்சி செய்ய, அதை தடுக்க அருண் விஜய் போடும் சண்டை காட்சி மிரட்டல்.
தமிழ் பேசும் லண்டன் போலீஸ் அதிகாரி யாக எமி ஜாக்சன், சண்டை கட்சிகளில் தூள் கிளப்புகிறார்..
அப்பா – மகள் சென்டிமென்ட் காட்சிகள் சில இடங்களில் இயல் நெகிழ வைத்துள்ளார்.
சந்திப் k.விஜயனின் ஒளிப்பதிவில், ஜி. வி. பிரகாஷ் ன்- இசையில் மிஷன் சாப்டர் ஒன் – ஆக்சன் திரில்லர்