
நீலம் புரொடெக்ஷன்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் எஸ். ஜெயக்குமார் இயக்கத்தில் அசோக் செல்வன், சாந்தனு, கீர்த்தி பாண்டியன், பகவதி பெருமாள் உள்ளிட்டோர் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள படம் ப்ளூ ஸ்டார்.
அரக்கோணத்தை சேர்ந்த இரண்டு கிரிக்கெட் அணி, காலனி மக்கள் சார்பாக அசோக் செல்வன் (ப்ளூ ஸ்டார் பாய்ஸ் ) அணிக்கும், மற்ற சமூக மக்களின் அணி சார்பான தலைவன் சாந்தனு பாக்யராஜ் ( ஆல்ஃபா பாய்ஸ்) க்கும் இடையே யார் பலமானவர்கள் என்ற போட்டி. படம் துவங்கியதுமே அந்த இரண்டு அணிகள் மோதும் கிரிக்கெட் போட்டி..இந்த இரண்டு அணி மோதும் போட்டியே படம் முழுவதும் என்று நினைத்தால் அரசியலையும் உள்ளே இழுத்து சிக்சர் அடிச்சிருக்காரு இயக்குனர் எஸ் ஜெயக்குமார். ,
கிரிக்கெட்டில் வெற்றி பெற்று, மைதானத்தை பிடிக்கும் சாந்தனு பாக்கியராஜ் க்கு, திருத்தணி டீம் மூலம் பிரச்சினை வரவே, தனி பிரச்சினை பொது பிரச்சினையாக மாறுகிறது. அப்பிரச்சினை அவர்களின் வாழ்க்கையிலும் சமூகம் குறித்த பார்வையிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த இறுதியில் இரு அணிகளும் அப்பிரச்சினை யிலிருந்து எப்படி மீள்கிறார்கள் எண்பதே ‘ப்ளூ ஸ்டார்’.

ப்ளூ ஸ்டார் நாயகனாக வரும் அசோக் செல்வன், இதுவரை இல்லாத நடிப்பை வெளிப்படுத்தியிருக்காரு.
வழக்கமாக வரும் அனைத்து ஸ்போர்ட்ஸ் படங்களில் வரும் ‘ மெண்டர் ‘ கதாபாத்திரம் மிகவும் பலமானதாக இருக்கும்.. அந்த வகையில், அதன் கனத்தை உணர்ந்து அதற்கேற்றார் போல் நடித்து நம் மனதில் நிற்கிறார் பகவதி பெருமாள்.
மத கொள்பாட்டில் நிலைத்து நின்று ‘ வசனம் ‘ மூலம் நம்மை ஆங்காங்கே சிரிக்க வைக்கும் பொறுப்பான அம்மா வாக லிஸ்ஸி ஆண்டனி,
கீர்த்தி பாண்டியன் வரும் இடத்தில் எல்லாம் பளிச் என் அழகான சிரிப்புடன் இதுவரை இல்லாத நடிப்பில் தெரிகிறார்…சாந்தனு, பிரித்வி, திவ்யா துரைசாமி, இளங்கோ குமரவேல், இப்படி ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் அற்புதமாக தேர்ந்தெடுத்து நடிக்க வைச்சுருக்காரு இயக்குனர்.
தமிழ் அ.அழகனின் ஒளிப்பதிவு, கிராமத்து கிரிக்கெட் மைதானத்தையும், வெட்டவெளி யையும், புழுதி பறக்க காண்பித்து தெறிக்க விடுகிறார்…
ப்ளூஸ்டார் படத்தின் முக்கிய ஸ்டார்-இசையமைப்பாளரான கோவிந்த் வசந்தா. அவரது பின்னணி இசையே இப்படத்திற்கு பெரிய பலம்.
ப்ளூ ஸ்டார் – ஷைனிங் ஸ்டார்.
