ஓபன் கேட் பிக்சர்ஸ் சார்பில் அரவிந்த் வெள்ளையப்பன் தயாரிக்க..
டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் யோகி பாபு, இனியா, மொட்டை ராஜேந்திரன், பால சரவணன் என பலர் நடித்திருக்கும் திரைப்படம் தூக்கு துரை.

இசை -மனோஜ் கே எஸ்

அரச குடும்பத்தை சேர்ந்த அண்ணன் ( மாரிமுத்து) தம்பி (நமோ நாராயணா) இருவரில் மூத்தவரான மாரிமுத்து விற்கு முதல் மரியாதை கிடைக்க, அதே சமயம் அந்த ஊர் தெய்வத்தின் கிரீடத்தை அவரிடம் கொடுக்கிறார்கள், தனது மகள் இனியா வுடன் சென்று அதனை பத்திர படுத்தி வைக்கிறார் ஜமீந்தாரான மாரிமுத்து.
நாயகி இனியா வோ, ஊர் திருவிழாக்களில்  ப்ரொஜெக்டர் மூலம் திரைப்படம் போடும் ஆபரேட்டராக வரும் யோகிபாபு விடம் மனசை பறி கொடுக்கிறார். தங்கள் காதலை தன் அப்பா ஏற்று கொள்ள மாட்டார் என்று இருவரும் அவ் ஊரை விட்டு ஓடுகிறார்கள்…
இதனால் கோபம் கொள்ளும் ஜமீன்தார் யோகி பாபுவை  கிணற்றில் வைத்து எரித்து விடுகிறார்.
இதை எடுக்க முயற்சி செய்பவர்களை யோகிபாபு பேயாக வந்து பயமுறுத்துகிறார். அந்த கீரிடம் அரச குடும்ப வம்சா வளியினருக்கு கிடைத்ததா?அதற்காக ஊர் மக்கள் என்னென்ன போராட்டங்களை சந்தித்தார்கள்  என்பது தான் படத்தின் கதை.

யோகி பாபு மற்றும் இனியா தங்களுக்கு  கொடுத்த கதாபாத்திரத்தை  சிறப்பாக செய்துள்ளார்கள்..மகேஷ் சுப்ரமணியம் சிரத்தை யோடு நடித்தால் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வரலாம்…
மேலும் கதையில் கொஞ்சம் தொய்வு ஏற்படும் போதெல்லாம் பால சரவணன் கை கொடுக்கிறார்…

கொஞ்சம் திகில்-கொஞ்சம் நகைச்சுவை  கொடுத்து பார்வையாளர்களை ரசிக்க வைக்க, முயற்சித்துள்ளார் இயக்குனர் டென்னிஸ் மஞ்சுநாத்.

ரவி வர்மா வின் ஒளிப் பதிவில் தூக்கு துரை சுமார் ரகம்..