ஆர்.ஜே.பாலாஜி, மீனாட்சி சௌத்ரி, சத்யராஜ், கிஷன் தாஸ், ஜான் விஜய், தலைவாசல் விஜய், லால், ரோபோ சங்கர், ஒய்.ஜி.மகேந்திரன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்…

தற்கொலைக்கு முயற்சிக்கும் கதிர்(ஆர்.ஜே. பாலாஜி), தற்கொலைக்கான காரணத்தை விவரிக்க, ஃபிளாஷ் பேக் -ல் கதை நகருகிறது….தன் ஊரில் முடி திருத்தும் சாச்சா வை(லால்) பார்த்து இன்ஸ்பையர் ஆகி தானும் ஒரு நாள் சாச்சாவை போன்று முடிதிருத்துபவர் ஆக வேண்டும் என்பதே கதிரின் கனவு, ஆசை, இலட்சியம்….தன் இலட்சியத்தை அடைய
இந்தியாவின் சிறந்த சிகை அலங்கார நிபுணர்களில் ஒருவரான ஜான் விஜய்யிடம், வேலைக்கு சேர அங்கிருந்து தனியாக தொழில் தொடங்க எண்ணி,
சிங்கப்பூர் சலூன் என்ற பிரமாண்டமான கடையை தொடங்குகிறார்..இந்த கடை தொடங்கியதில் இருந்து ஏகப்பட்ட சிக்கல்கள் நிலவ, அதனால் விரக்தியடையும் ஆர்.ஜே.பாலாஜி தற்கொலை முடிவுக்கு செல்கிறார். அதிலிருந்து அவர் எவ்வாறு விடுபடுகிறார்…சிங்கப்பூர் சலூன் எண்ணானது, அவரின் இலட்சியம் நிறைவேறியதா ? என்பதே படத்தின் கதை ஆகும்.

கதிரின் மாமனாராக நடித்திருக்கிறார் சத்யராஜ். கஞ்சனாக நடித்து அசத்தியிருக்கும் அவர் வரும் இடமெல்லாம் காமெடி கலாட்டா…அதுவும்
இடைவேளைக்கு முன்பு அவர் வரும் காமெடி காட்சிகள் அருமை. சிரித்து சிரித்து கண்ணீரே வந்துவிடும்.

முதல் பாதியில் காமெடி கலாட்டாவாக சென்ற கதை, இரண்டாம் பாதியில், அதில் இருந்து தடம் புரண்டு மற்றொரு தடத்திற்கு செல்ல, தொய்வு தெரிகிறது….

சிறப்பு தோற்றத்தில் லோகேஷ் கனகராஜ், ஜீவா ஆகியோரை விட அரவிந்த்சாமி கேரக்டர் நன்றாக அமைக்கப்பட்டுள்ளது.
ஹீரோயின் மீனாட்சி சௌத்ரிக்கு இப்படத்தில் பெரிய அளவில் வேலை இல்லை. இருந்தும் குடுத்த கதா பாத்திரத்தை நிறைவாக செய்திருக்கிறார்…

சுகுமாரின் ஒளிப்பதிவில் ராவேத் ரியாஸின் பின்னணி இசையில் சிங்கப்பூர் சலூன்..மக்கள் போகும் சலூன்.