
இயக்குனர் மிஷ்கின் இசையில், தம்பி ஆதித்யா இயக்கத்தில், விதார்த், பூர்ணா நடிப்பில் வெளிவந்துள்ள படம் டெவில்
த்ரில்லர் கொண்டு படம் ஆரம்பிக்க தொடங்குகிறது..விதார்த் ககும் பூர்ணா விர்க்கும் பெற்றோர்கள் பார்த்து திருமனம் செய்து வைக்க, திருமண பந்தத்தில் நாட்டம் இல்லாத விதார்த், தான் விரும்பும் ஆபீஸ் செக்ரட்ரி (சுபஶ்ரீ) யை தேடி முதல் இரவு அன்றே செல்ல, தவிக்கும் மனைவியாக பூர்ணா இருக்க, ஒரு விபத்தின் மூலம் அறிமுகமாகும் திரிகுன் கும் பூர்ணா விற்கும் ஒரு நட்பு மலர, அது ஒரு கொலையில் போய் முடிகிறது. இந்த கொலையை செய்தது யார் ? ஏன் செய்தார்கள், பூர்ணா அதில் இருந்து எப்படி விடு படுகிறார் என்பதே மீதக்கதை..
படம் தொடங்கியது முதல் இருந்தே, குறைந்த நபர்கள் மட்டுமே வைத்து, பல்வேறு ட்விஸ்ட் களுடன் திரைக்கதை அமைத்து, சீட் ன் நுனியில் அமர வைத்துவிட்டார் இயக்குனர்… திரில்லர் வகையில் பயணம் செய்யும் இப்படம் ஒரு கட்டத்திற்க்கு மேல் ஹாரர் க்கு மாறி ரசிகர்களை பயமுறுத்துகிறது.

முதல் பாதியில் பூர்ணா, திரிகுன் காட்சிகள் அழகோ அழகு…
ஹீரோயினுக்கு நல்ல ஸ்கோப் உள்ள படம் என்பதால், அந்த வாய்ப்பை பயன்படுத்தி நடிப்பாலும், அழகாலும் ரசிகர்களை கிர ங்கடிக்க வைத்துவிட்டார் நடிகை பூர்ணா.
விதார்த்தும், பூர்ணாவும் ஒரு நிஜ தம்பதி போல் சிறப்பாக நடித்துள்ளனர்.விதார்த்தின் நடிப்பு சிறப்பாக இருந்த போதிலும் நடிப்பால் படத்தை தூக்கி நிறுத்தி விட்டார் நடிகை பூர்ணா… கணவன் மீது அன்பு, துரோகத்தின் போது கொந்தளிப்பு, மன்னிக்கும் இடத்தில் பாசம் காதல் என அனைத்தையும் கொட்டி..தான் ஒரு நடிப்பு ராட்சஸி என்பதை நிரூபித்து விட்டார்….
திரிகுன், சுபஸ்ரீ ஆகியோரின் நடிப்பும் பாராட்டிற்குரியது..
மிஷ்கின் இசையில் காதல் பாடல் அருமை…மேலும் காதை கிழிக்கும் இரைச்சல் இல்லாத மிஷ்கினின் பின்னனி இசையில் இயக்குனர் அதித்யாவின் டெவில் _ ஒரு அழகான தேவதை..
