
90ஸ் கிட்ஸ் ன் காதலை மையமாக வைத்து வெளியாகி இருக்கும் திரைப்படம் ” மறக்குமா நெஞ்சம் “
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்திற்கு பிறகு, கதாநாயகனாக நடித்திருக்கும், இவருடன் மலினா, ஸ்வேதா வேணுகோபால், விஜய் டிவி தீனா, பிராங்க் ஸ்டார் ராகுல், மற்றும் முனிஷ்காந்த் ஆகியோர் நடிசிருக்காங்க…
இயக்கம் ர.கோ.யோகேந்திரன்
இசை – சச்சின் வாரியர்
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு குறிப்பிட்ட பள்ளியில், 2008 ஆம் ஆண்டு 12-ஆம் வகுப்பில் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தற்பொழுது அவரவர்கள் வெவ்வேறு வேலைக்கு சென்று செட்டில் ஆகி யிறுக்கும் தருவாயில், இவர்கள் எழுதிய தேர்வில் முறைகேடு நடந்திருப்பதாக கூறி இந்த தேர்வை ரத்து செய்ய கோரி வழக்கு தொடுக்கப்படுகிறது. இதையடுத்து 10 வருடங்கள் கழித்து அந்த மாணவர்கள் எழுதிய தேர்வு செல்லாது மீண்டும் எழுதி தேர்ச்சி பெற வேண்டும், என தீர்ப்பு வரவே….இதை கண்ட மாணவர்கள் அதிர்ச்சியடைய, ஒரு மாணவன் கார்த்தி (ரக்ஷன்) மட்டும் ஆனந்தம் அடைகிறார்…. தனது பள்ளி பருவத்தில் சொல்ல மறந்த, காதலை தற்போதாவது சொல்ல வேண்டும் என்று தமது நண்பர்களோடு கிளம்புகிறார்….எண்ணங்கள் அசைபோட கதைக்களம் 2008 க்கு செல்கிறது…
சிறுவயது பள்ளி தோழி மலினாவை ஒரு தலையாக காதலிக்கும் அவர், கடைசி வரை தன் தோழியிடம் காதலை கூறாமலேயே பள்ளி பருவம் முடிந்து விடுகிறது…தற்பொழுது இந்தத் தீர்ப்பு வெளியானதை அடுத்து ஆனந்தமாகும் அவர் எப்படியாவது தன் காதலை இம்முறையாவது வெளிப் படுத்தவேண்டும் என்ற எண்ணத்தில் செல்லும் ரக்ஷன், தன் காதலை வெளிப்படுத்தினாரா, இல்லையா? இவர்களின் பண்ணிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி என்னவானது? என்பதே இப்படத்தின் மீதி கதை.

பொதுவாக சிறுவயதில் பள்ளியில் மாணவர்கள் செய்யும் அத்தனை வகையான விஷயங்களும் அதாவது, குறும்பு, காதல், விளையாட்டு, சண்டை, நட்பு என அணைத்தையும் குழைத்து கொடுத்து நம் நாஸ்டாலஜிக் பீலிங்சை தட்டி எழுப்பி இருக்கிறார் இயக்குநர் ராக்கோ யோகேந்திரன்.
எத்தனை காலங்கள் கடந்தாலும் நம் ஒவ்வொருவர் வாழ்விலும் பள்ளி நாட்களில் அரங்கேறிய முதல் காதலை மறக்க முடியாத காதலை இந்த படத்திலும் எதார்த்தமாக காண்பித்து பழைய நிணைவுகளைக் நினைவூட்ட தவறவில்லை….
பள்ளிப் பருவ மாணவனாக ரக்ஷ்ன்…இவர் வரும் இடங்களில் எல்லாம் முகத்தில் அசடு வழிய, ஒரு வித பயத்தில் காதலை சொல்ல படும் பாடு ரசிக்க வைக்கிறது….பின் நாட்களில் வளர்ந்த ரக்ஷன் இன்னும் கதைக்கேற்ப தன் நடிப்பைப் மெருகேற்றி இருக்கலாம்… நாயகி மலினா வழக்கமான கதாநாயகியாக வந்து போகிறார்.
நாயகனின் நண்பனாக வரும் விஜய் டிவி தீனா காமெடிக்கு பொறுப்பேற்று அதை கச்சிதமாக செய்து முடித்திருக்கிறார். இவருடன் குணச்சித்திர கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கும் பிராங்ஸ்டர் ராகுலும் சிறப்பாக நடித்திருக்கிறார். இறுதி கட்ட காட்சிகளில் சிறப்பாக நடித்து நம்மை நெகிழ வைத்து விடுகிறார்.
மேலும் நாயகியுடன் நடித்த ஆஷிகா, நட்டாலியா, ஸ்வேதா ஆகியோர் சிறப்பாக நடித்து கதாபாத்திரத்துடன் ஒன்றி இருக்கின்றனர். அவர் அவருக்கு கிடைத்த கேப்புகளில் எல்லாம் ஸ்கோர் செய்திருக்கின்றனர். பி.டி மாஸ்டராக வரும் முனீஸ்காந்த் நல்ல குணச்சித்திர நடிப்பு. .
கோபி துரைசாமி, ராஜேஷ் ஒளிப்பதிவில் பள்ளி சம்பந்தப்பட்ட காட்சிகள் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
சச்சின் வாரியர் இசையில் ஒரு ஃபீல் குட் படமாக வந்திருக்கும் மறக்குமா நெஞ்சம் 90’s கிட்ஸ் களுக்கு நினைவோட்டம்.
.
