
சுஜாதா விஜயகுமார் தயாரிப்பில், அந்தோனி பாக்கியராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், சமுத்திரகனி, அனுபமா பரமேஸ்வரன், அழகம் பெருமாள் உள்ளிட்ட பலர் நடித்து வெளிவந்திருக்கும் படம் சைரென் 108..
செய்யாத குற்றத்திற்காக உள்ளே சென்று,
14 ஆண்டுகள் கழித்து, தனது மகளை பார்க்கத் தவிப்புடன் பரோலில் வெளிவரும் ஜெயம் ரவி, போலீஸ் கண்ணில் மண்ணைத் தூவி, தண்ணை உள்ளே அனுப்பியவர்களை எப்படி பழி வாங்குகிறார் என்பதே, சைரன் 108…
ஆம்புலன்ஸ் டிரைவர் ஆன ஜெயம் ரவி, மாற்றுத்திறனாளி நர்ஸ் அனுபமா பரமேஸ்வரனை காதலித்து குடும்பத்தார் முன்னிலையில் திருமணம் செய்து சந்தோஷமாக வாழ்ந்து வர, தன் நண்பனை காப்பற்ற போய் அந்த போராட்டத்தில் தன் மனைவியை இழந்து, கொலைகாரன் என்ற பழியு டன் சிறை செல்லுகிறார்… இளம் வயதில் சென்ற அவர் 14 வருடம் கழித்து
நடுத்தர வயதில் தன் மகளை பார்க்க வெளிவருகிறார். தன் மேல் விழுந்த பழிக்கு காரணமானவர்களை சத்தமில்லாமல் வதம் செய்து முடிக்கிறார். பெப்பர் அண்ட் சால்ட் தோற்ற கதாப்பாத்திரத்தில் கன கச்சிதமாக பொருந்திப் போயிருக்கும் ஜெயம் ரவி, திலகன் கதாப்பாத்திரமாக வே வாழ்ந்து தன் அளவான நடிப்பால் ஆடியன்ஸ் மனதில் பதிந்துள்ளார்.
ஜெயம் ரவி சர்வ சாதாரணமாக செய்யும் அத்தனை விஷயங்களையும் கண்டு பிடிக்க அல்லல் படும் போலீஸ் அதிகாரியாக வரும் கீர்த்திசுரேஷ்,
ஆக்ரோஷ மான போலீஸாக நடிக்க முயற்சி செய்திருக்கிறார்..

ரவி யுடன் 24 மணி நேரமும் கூடவே இருக்கும், நிழல் போலீஸாக வரும் யோகி பாபு சில இடங்களில் நம்மை சிரிக்க வைக்கிறார்..
ஜி.வி. பிரகாஷின் பாடல் வரிகள் மற்றும் சாம் c.s.ன் பின்னனி இசை கதைக்கு பலம்.. செல்வகுமாரின் ஒளிப்பதிவு அருமை. படத்தொகுப்பில் இன்னும் கொஞ்சம் கவனம் எடுத்திருந்தால், சைரன் ஒலி பலமாக கேட்டிருக்கும்… 3/5.