லேகா தியேட்டர்ஸ் பட நிறுவனம் சார்பில், ராயல் பாபு தயாரிக்க கதை திரைக்கதை வசனம் எழுதி ஆதி ராஜன் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம் நினைவெல்லாம் நீயடா..

இத்திரைப்படத்தில் பிரஜன் கதாநாயகனாக நடிக்க, மனிஷா யாதவ் மற்றும் சினாமிகா நடிச்சிருக்காங்க..
அவர்களின் இளம் பருவத்தை காட்சிப்படுத்த இளம் நாயகன் நாயகியாக ரோஹித் – யுவலட்சுமி நடிக்க, மற்றும் முக்கிய கதாபாத்திரங்களில் ரெட்டின் கிங்ஸ்லி, மனோபாலா, மதுமிதா, டைரக்டர் ஆர்.வி. உதயகுமார், முத்துராமன், பி.எல்.தேனப்பன் ஆகியோர் நடிச்சிருக்காங்க..

பள்ளி பருவ காதலை மையமாக வைத்து இப்படம் எடுக்கபட்டிருக்கு.. பள்ளியில் படிக்கும் கவுதம் மற்றும் மலர் விழி காதலித்து வர, கவுதம் ஒரு இசை கருவியை வாங்கி கொடுக்க அதுவே அவர்களின் காதலின் நினைவு சின்னமாக இருக்கிறது. பள்ளி படிப்பின் பாதியில் வெளி நாட்டில் இருக்கும் மலர்விழி யின் அப்பா க்கு, உடம்பு முடியாமல் போகவே, படிப்பை தொடர முடியாமல், சொல்லி கொள்ளவும் முடியாமல் மலர் விழி வெளிநாடு சென்று விடுகிறார்… சில வருடங்கள் கழித்து இளைஞ்சன் ஆன கவுதம் ஐ, அவரது மாமன் மகள் காதலிக்க, ஒரு கட்டத்தில் அவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகிறது…திருமணம் ஆகியும் மலர் நினைவாகவே இருக்கும் கவுதம் சதா குடித்துக்கொண்டே இருக்க, வெளிநாட்டில் இருந்து கவுதம் மேல் காதலோடு திரும்பி வருகிறாள் மலர்விழி!… கவுதம் மனைவியுடன் வாழ்கிறானா? திரும்பி வந்த மலர் க்கு கவுதம் கிடைத்தானா ? இவர்கள் காதல் என்னானது? என்பதே கதை …

நாயகன் பிரஜின் கொடுத்த கதாபாத்திரத்திற்கு ஏற்ப நிறைவாக செய்ய, முறை பெண்ணாக வரும் மனிஷா யாதவ் காதல்,ஆங்காரம், பொறாமை, பின் அமைதி என அத்தனை வகையான நடிப்பையும் தன் முக பாவத்தால் காட்டி அசத்தியுள்ளார்…

இளம் வயது கவுதம்(ரோஹித்)மலர்(யுவலட்சுமி) அவர்களின் காட்சிகள் அனைத்தும் பளிச் என இருக்க, நாயகி யுவலட்சுமி புதிதாய் பூத்த மலர் போல் அழகாக தெரிகிறார்..

ரெடின்கிங்ஸ்லி, மற்றும் மதுமிதா,rv உதயகுமார் அவர்கள் பங்குக்கு சிறப்பாக நடிக்க,

இவர் தான் மலர் விழி என நாம் நினைத்து, நம் என்ன ஓட்டங்கள் செல்ல,கடைசி காட்சியில் twist ஒன்றை வைத்து நம்மை நிம்மதி பெருமூச்சு விட வைத்து விட்டார் இயக்குனர் ஆதி ராஜன்…

இளையராஜாவின் இசை யில் “நினைவெல்லாம் நீயடா” காதல் அழிவதில்லை..