வைத்தியநாதன் பிலிம் கார்பன் பட நிறுவனம் தயாரிக்க , வடிவுடையான் இயக்ககத்தில் ஜீவன் நடித்து வெளியாகி இருக்கும் படம் பாம்பாட்டம்.

இப்படத்தில் ஜீவனுடன் சலில் அன்கோலா, ரமேஷ் கண்ணா, லிவிங்ஸ்டன், கராத்தே ராஜா, ரிக்கின், சரவணன், சக்தி சரவணன், ரித்திகா சென், மல்லிகா ஷெராவத், சுமன் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள்

இசை – அம்ரீஷ்

சுதந்திரத்திற்கு முன் தன்னுடைய சமஸ்தானத்தை ஆட்சி செய்து கொண்டிருக்கும் ராணி மகாதேவி யின் ஜோசியர், ஒருநாள் நீங்கள் பாம்பு கடித்து இறக்க நேரிடும் என்று கூற, கோபமடைந்த ராணி யோ, அந்த சமஸ்தானத்தில் உள்ள அனைத்து பாம்புகளையும் கொல்ல உத்தரவிடுகிறார். இதிலிருந்து ஒரு பாம்பு மட்டும் தப்பித்து வந்து ராணி மகாதேவியை கொன்றுவிடுகிறது…ராணி மகாதேவியின் மகளுக்கும் இதே ஆபத்து இருக்கிறது என்று ஜோசியர் கூற, தந்தையும் மகளும் ஊரை விட்டு வெளியேறுகிறார்கள். அதன் பின்பு ராணியின் ஆவி அந்த அரண்மனையை சுற்றிக் கொண்டிருப்பதாக ஊர் மக்கள் பேசும் நிலையில் அதனை கண்டறிய போலீஸ் அதிகாரியாக ஜீவன் வருகிறார்…அவர் வந்த பிறகு என்ன நடக்கிறது? என்பது தான் படத்தின் மீதி கதை.

ஆக்சன், திரில்லர், அட்வென்சர் போன்ற பாணியில் படத்தை கொடுத்து நடித்தும் இருக்கிறார்.. இயக்குனர் வடிவுடையான்.

அப்பா, மகன் என்று இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறார் நடிகர் ஜீவன்…அப்பாவாக வரும் ஜீவன் பளிச் என தெரிய ஆக்சன் லும் கலக்குகிறார்…ராணி மகாதேவியாக மல்லிகா ஷெராவத், அவர் வரும் காட்சிகள் குறைவு என்றாலும் நிறைவாக நடித்துள்ளார்…

படத்தின் முதல் பாதி மெதுவாக சென்றாலும், இரண்டாம் பாதியில் பல கிளை கதைகள் கொண்டும் cg காட்சிகள் வைத்தும் சாதுர்யமாக படத்தை வேகமெடுக்க வைத்து விட்டார் இயக்குனர்…

இக்கதைக்கு இசை இரைச்சல்…

மொத்தத்தில் பாம்பாட்டம் இன்னும் கொஞ்சம் சிரத்தை எடுத்திருந்தால் சீறி பாய்ந்திருக்கும்…2.5/5