
தயாரிப்பாளர் s. கார்த்திகேயன் தயாரிப்பில் கதை ,திரைகதை, வசனம் எழுதி, ராஜ்தேவ் இயக்கத்தில் ஶ்ரீகாந்த் நடித்து வெளிவந்திருக்கும் படம் “சத்தமின்றி முத்தம் தா “
முகக் கவசம் அணிந்த நபர் ஒருவர், ஒரு இளம்பெண்ணை (பிரியங்கா திம்மெஸ்) கொலைவெறியோடு துரத்த, அவள் அவளுடைய வீட்டுக்குள்ளிருந்து வெளியே வர, தயாராய் நிற்கும் கார் ஒன்று அவள் மேல் மோதிவிட்டு செல்கிறது..அடிபட்டு கீழே கிடக்கும் தன் மனைவியை ஶ்ரீகாந்த் ஆஸ்பத்திரி யில சேர்த்து சிகிச்சை தர, கண்விழிக்கும் அவள் தான் யார் என்பதையே சுத்தமாக மறந்து விடுகிறாள்…இருந்தும் தன் கணவன் ஶ்ரீகாந்தின் பாதுகாப்பில் வீட்டுக்கு செல்ல, கடந்த காலத்தை மறந்துவிட்ட அந்த பெண்ணை தன் மனைவி என்றும், அவளை காணவில்லை என்றும் சொல்லி இன்னொரு இளைஞன் போலீஸில் புகார் தருகிறான். ஹரிஷ் பேரடி இவாசரணையை துவக்குகிறார். இதற்கிடையில்
அந்த பெண்ணுக்கு, தொழி மூலம் தன்னுடன் இருப்பவன் தன் கணவன் இல்லையென்பது தெரிய வர, அதிரும் அவள் அதிலிருந்து தப்ப முயல, இன்ஸ்பெக்டர் ஹரிஷ் பேரிடி யிடம் அடைக்கலம் ஆக..இதுவரை அவள் கணவன் என்று கூறும் நபர் யார்? அவனது நோக்கம் என்ன? அவளுடைய கடந்த காலம் மற்றும் அவளை கொலை செய்ய முயற்சித்தது யார்? என்பதே கண்டு பிடிப்பதே..”சத்தமின்றி முத்தம் தா!…
கதாநாயகனாக வரும் ஶ்ரீகாந்த், இதுவரை சாக்லேட் பாய் யாகவும், அடுத்து சில படங்களில் குணசசித்திர கதாபாத்திரத்தில் நடித்தும் வந்தவர் , த்ரில்லர் கதைக்கேர்ப்ப.. இறுகிய முக பாவத்தோடு படம் முழுவதும் வருகிறார்…சண்டைக்காட்சிகளில் கவணம் ஈர்த்திருக்கிரார்..

நாயகியாக பிரியாங்கா திம் மெஸ் மிரட்சியான நடிப்பில் மிதமாக நடிச்சிருக்கங்க…வழக்கம் போல வியான் மங்கலசெரி, ஹரிஷ் பேரிடி, நிஹாரிகா ஆகியோர் குடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக ஏற்று நடிச்சுருக்காங்க…
சஸ்பென்ஸ் திரில்லருக் கான கதை க்கு இசையமைப்பாளர் ஜூபின் – ன் இசை பெறும்பங்கு வகித்துள்ளது…
எளிமையான கதைக் கேற்ப அழகான காட்சிகளை படம் பிடித்துள்ளார் ஒளிப்பதிவாளர் யுவராஜ்.
சஸ்பென்ஸ் திரில்லருக்கான கதையை கையிலெடுத்த இயக்குநர், ராஜ்தேவ் தன் அனுபவத்தை கொண்டு, நாடகத்தனமான சில காட்சிகளை தெளிக்காமல் இருந்திருந்தால்…கூடுதல் கவனம் பெற்றிருக்கும்….மொத்தத்தில் “சத்தமின்றி முத்தம் தா” படம் நிறைவு..சத்தம் குறைவு…3/5..