
வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனலின் டாக்டர். ஐசரி கே கணேஷ், தயாரிக்க,
கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வருன், ராஹி, கிட்டி, கிருஷ்ணா மற்றும் மன்சூர் அலிகான் நடித்து வெளி வந்திருக்கும் படம் ஜோஷுவா இமை போல் காக்க..
வருணின் காதலை ஏற்க மறுத்த குந்தவி (ராஹி) நியூயார்க் செல்ல, ஒரு சூழலில் கூலிப்படைகளிடம் இருந்து அவரை காப்பாற்றும் பாடிகார்டு பொறுப்பு ஜோஷ்வாவுக்கு வந்து சேருகிறது…
வழக்கறிஞராக உள்ள குந்தவி க்கு ஒரு போதை பொருள் கடத்தல் கும்பல் தலைவனால் கொலை முயற்சி எந்நேரத்திலும் நடக்கலாம் என ஜோஷுவா அவருக்கு பாதுகாப்பு தருகிறார். குந்தவியை கொல்ல வரும் ஆட்களை வீழ்த்தி, கண்ணை இமை போல் குந்தவியை காக்கிறார் ஜோஷுவா.
இது வரை சில படங்களில் நடித்த வருண், இதில் முற்றிலும் மாறுபட்டு , உடல் எடை குறைத்து, உண்மையான பாடிகார்டு போன்று உடற்க்கட்டுடன், தன்னை மெருகேற்றி நடிச் சிருக்காரு… தமிழில் ஒரு நல்ல ஆக்ஷன் ஹீரோ வாக உருவாகியிருக்கும் இவர் காதல் காட்சியிலும் அசத்துகிறார்.

இதுவரை நாயகனாக நடித்த கிருஷ்ணா முதல் முறையாக வில்லன் கதாப்பாத்திரம் ஏற்று சிறப்பாகவே நடிச்சிருக்காரு…
நாயகி ராஹி காதல் கட்சிகளில் தாராளம்…
கிட்டி (கிருஷ்ணமூர்த்தி ) மீண்டும் வில்லனாக மிரட்டியுள்ளார்.. முதுமை தெரிந்தாலும் குரலிலும் உடல் மொழியிலும் கலக்கும் கிட்டி..பழைய படங்களை நினைவுப்படுத்துகிறார்..
பாடகர் கார்த்தி இப்படத்திற்கு இசையமைச் சிருக்காரு…
சாதாரண மக்களையும் தன் படங்கள் மூலம் கவர்ந்த கவுதம் மேனன் தற்போது இயக்கிய – ஜோஷூவா இமைபோல் காக்க – ஹைடெக் ஹீரோ…