
பூர்வா பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில்,பிரதீப் குமார் தயாரிப்பில்
பிரசாத் ராமர் கதை மற்றும் திரைக்கதையை எழுதி இயக்கி வெளிவந்திருக்கும்
இப்படத்தில் செந்தூர் பாண்டியன், ப்ரீத்தி கரண், சுரேஷ் மதியழகன், தமிழ் செல்வி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்
படத்தின் நாயகன் செந்தூர் பாண்டியன் சதா சிகிரெட் பிடித்துக் கொண்டும் நண்பர்களுடன் ஊர் சுற்றி கொண்டும் திரிய, தான் காதலிக்கும் பெண்ணுடன் சண்டை போட்டு வீடு வருவதற்குள்..முக நூலில் அடுத்தடுத்து.. நிறைய பெண்களுக்கு டெக்ஸ்ட் போட்டு அறிமுகமாகிறார்… அதில் ஒரு பெண் உடனிடி மெசேஜ் போட, மாயவரத்தில் இருக்கும் அப்பெண்ணை பார்க்க தன் நண்பருடன்
மதுரையிலிருந்து தஞ்சை, புதுக்கோட்டை, கும்பகோணம் வழியாக மாயவரத்தை அடைகிறார்கள்…அங்கு அவருக்காக காத்திருக்கும்
நாயகி ப்ரீத்தி கரன் தனது தோழிகளுடன், நாயகன் மற்றும் அவரது நண்பனுடன் டன் இணைந்து வெளியில் செல்ல, எப்படியாவது நாயகி ப்ரீத்தி கரணுடன் உல்லாசமாக இருந்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் செல்கிறார் செந்தூர் பாண்டியன். இவரது எண்ணம் நிறைவேறியதா ?? என்னென்ன பிரச்சினைகளை சந்திக்கிறா ர் என்பதே மீதிக்கதை..
மதுரை மண்ணில் இருக்கும் கிராமத்து இளைஞர்களின் வட்டார பேச்சினையும், உடல் மொழியையும் கண் முன்னே கொண்டு நிறுத்தியுள்ளார் இயக்குனர் பிரசாத் ராமர்..
கதைக்கேற்றார் போல் குடுத்த கதாபாத்திரத்தை கச்சிதமாகப் ஏற்று நடித்திருக்கும் செந்தூர் பாண்டியனின் அலட்சியமான நடிப்பில்..நம்ம பேச வைக்கிறார்… வழக்கம் போல குடுத்த கதாபாத்திரத்தை சரியாக செஞ்சுறுக்காரு… நாயகி ப்ரீத்தி கரன்.
இப்படத்திற்கு இசையமைத்து, தயாரித்து, பாடல்களையும் எழுதியுள்ளார் பிரதீப் குமார்..
ஒளிப்பதிவு – உதய் தங்கவேல்..
வேகமாக மாறிவரும் டிஜிட்டல் சமுதாயத்தில் இளம் தலைமுறையினரின் சீர்கேட்டை வெளிப்படுத்தி அறிவுறுத்தும் ப(பா)டமாக வந்திருப்பதால்…
நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே.. வயது வந்தோர் பார்க்க வேண்டிய படம்…2.5/5..