அறிமுக இயக்குனர் நிகேஷ் இயக்கத்தில் ஜி.வி பிரகாஷ் குமார், மமிதா பைஜு நடிப்பில் வெளியாகி இருக்கும் திரைப்படம் ரெபல்.

இசை – ஜி.வி

80’களில், கேரளாவில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு உள்ளது ரபெல்..மூணாறில் இருந்து கேரளாவுக்கு, அதாவது மலையாளிகள் அதிகம் படிக்கும் பாலக்காடு கல்லூரிக்கு, ஜி.வி. பிரகாஷ் மற்றும் அவரது நண்பர்கள் படிக்க செல்கின்றனர். அங்கே ஆசிரியர்கள் முதல் மாணவர்கள் வரை தமிழர்களை என்று இழிவாக வே நடத்துகின்றனர். மேலும் அங்கே படிக்கும் சீனியர் மலையாள மானவர்களோ இரு குழுவாக, பிரிந்து மோதி கொள்கின்றனர்…ஆனால், மலையாள ஹீரோயினான மமிதா பைஜுவுக்கும் ஹீரோவுக்கும் காதல் டிராக் ஒன்று ஒரு பக்கம் ஓடிக்கொண்டிருக்க, ஜி.வி யின் நண்பனான செல்வா ஒரு மலையாள மாணவன் மூலம் அநியாயம் நடக்க அவன் இறந்து விடுகிறான்..அதனால் வெகுண்டெழுந்த ஹீரோ புரட்சியாளனாக ஆவதே ரபேல்…இடைவேளைக்குப் பிறகு தங்களை மட்டம் தட்டும் மலையாளிகளை எதிர்த்து ஹீரோவும் அவரது நண்பர்களும் திருப்பி பதிலடி கொடுத்தார்களா? இல்லையா? என்பது தான் மீதி கதை.

கதிர் ஆக நடித்திருக்கும் ஜி.வி சில இடங்களில் சிறப்பாக நடித்திருந்தாலும், ஆக்ரோஷமான காட்சிகளில் இன்னும் கொஞ்சம் கவனமாக நடித்திருக்கலாம்.. நெகட்டிவ் ரோலில் ஆண்டனியாக நடித்திருக்கும் வெங்கடேஷ், சார்லியாக நடித்திருக்கும் ஷாலு ரஹிம் ஆகிய இருவரும், வழக்கமான வில்லன்களாகவே தெரிகிறார்கள்… மமிதா பைஜூ, காட்சிகள் குறைவாக இருந்ததால், ஸ்கோர் பண்ணும் வாய்ப்பும் குறைவு..ஆதித்யா பாஸ்கர் எமோஷனலான காட்சி களில் சிறப்பாக நடித்துள்ளார் …

இவர்களைத் தவிர கருணாஸ், சுப்ரமணியம் சிவா, ஆதிரா, கல்லூரி வினோத், ஆண்டனி எனப் பலரும் வந்து, குடுத்த கதாபாத்திரத்தில் சிறப்பாக வழக்கம் போல் நடித்து இருக்கிறார்கள்..

பதவி என்ற பெரும் போதைக்காக.. அடித்துக் கொண்ட இரு எதிர் எதிர் மலையாளி அணிகள், தமிழன் மட்டும் வரவே கூடாது என்று ஒன்று சேரும், அவர்களின் ஆதிக்கத்தை தோலுரித்து காட்டியதற்காகவே இயக்குனரை பாராட்டலாம்..

அருண் ராதாகிருஷ்ணனின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம். ஜிவி பிரகாஷ், இசையில் பாடல்கள் சுமார்… Ofroவின் பின்னணி இசை சில இடங்களில் உதவுகிறது… மொத்தத்தில் ரபெல் சுமார் ரகம்…