சாய் ரோஷன் இயக்கத்தில்
ஹீரோவாக பிக் பாஸ் ஷாரிக் ஹாசன், ஹீரோயினாக ஹரிதா மற்றும் தோழிகளாக மோனிகா ரமேஷ், காவ்யா அமைரா, திவாகர் குமார், நிதின் ஆதித்யா, ஆனந்த், அரவிந்த் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “நேற்று இந்த நேரம்”.

ஹீரோ ஷாரிக் ஹாசன், அவரது காதலி ஹரிதா மற்றும் அவர்களது நண்பர்கள் ஊட்டிக்கு சுற்றுலா செல்கின்றனர். சென்ற இடத்தில் ஷாரிக் (நிகில்) காணாமல் போய் விட்டதாக போலீஸ் அதிகாரி யிடம் அவரது நண்பர் புகார் கொடுக்க, விசாரனை ஆரம்பமாகிறது.. அந்த நண்பர் குடுத்த புகாரின் பேரில் விசாரனை நடந்து கொண்டிருக்க, மறுநாள் புகார் குடுத்த நண்பரும் திடீரென தலை மறைவாகிறார்..காணாமல் போன இருவரைப் பற்றி போலீசார் விசாரிக்கும் போது, ​​நண்பர்கள் ஒவ்வொருவரும் ஒரு கதை சொல்லி, கடைசியில் காணாமல் போனவர்கள் இறந்து கிடக்க, அவர்கள் எப்படி இறந்தார்கள், யார் அவர்களை கொன்றது ? என்ற கேள்விக்கு விடையே மீதி கதை….

கதைக்கு ஏற்ற தேர்வாக ஷாரிக் திருப்தியான நடிப்பை கொடுக்க, போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்த செல்வா, கான்ஸ்டபிள் வேடத்தில் நடித்த பாலா என படத்தில் நடித்த அத்தனை நடிகர்களும் தங்கள் பணியை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள்.

ஒரே சம்பவத்தை பல கோணங்களில் சொல்லி திரைக்கதையை சொல்லி இருக்காரு இயக்குனர் சாய் ரோஷன் கே.ஆர்..

கெவின் இசை யில் பாடல்கள் சுமார் ரகம்…மற்றும் விஷால் மணிவண்ணன் ஒளிப்பதிவில் ஊட்டி அழகாக தெரிய, விறுவிறுப்பான கதையை, இன்னும் கொஞ்சம் வேகமாக ஷார்ப் பாக கொடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்… இருப்பினும், “நேற்று இந்த நேரம்” கோடையில் குளிர்ச்சி..3/5