
இயக்குனர் ஜெய் கிருஷ்ணா நடிப்பில் அவரோடு சா. தமிழரசன், ஈஸ்வரி ராவ்,தீபா நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “ஆலகாலம்”
கணவனின் குடிப்பழக்கத்தால்
கணவனை இழந்த ஒற்றைத் தாயான யசோதா (ஈஸ்வரி ராவ்) தனது ஒரே மகனான ஜெய் யை குடியின் வாடை யே படாமல் வளர்க்கிறார்..பள்ளி படிப்பை முடித்து, கல்லுரி யில் அடியெடுத்து வைக்கும் ஜெய் மிகவும் புத்திசாலியாக அனைத்திலும் முதல் மதிப்பெண் எடுத்து நல்ல பெயர் வாங்குகிறார்…
இதற்கிடையே, ஜெயகிருஷ்ணாவின் ஒழுக்கம், படிப்பு திறன் ஆகியவற்றால் ஈர்க்கப்படும் சக மாணவி சாந்தினிக்கு அவர் மீது காதல் ஏற்படுகிறது. சாந்தினியின் காதலை ஜெயகிருஷ்ணாவும் ஏற்றுக்கொள்கிறார். இந்நிலையில் சாந்தினி மீது ஒருதலை காதலில் இருக்கும் ராஜேஷ் கோ இது பிடிக்காமல் நய வஞ்சகமாய் ஜெய் க்கு மது பழக்கத்தை கற்று கொடுக்க, அவனின் சூழ்ச்சி யிணை அறியாத ஜெய் மது பழக்கத்திற்கு அடிமையாகி விடுகிறார்… குடி பழக்கத்திற்கு அடிமையாகி தாயின் கனவும், ஒரு இளைஞனின் வாழ்க்கையும் எவ்வாறு சிதைந்து போகிறது என்பதை சொல்வது தான் ‘ஆலகாலம்’.
படத்தின் முதல் பாதியை விட இரண்டாவது பாதி வெகமெடுக்க, தமிழ் ஆக நடித்திருக்கும் சாந்தினி தமிழரசன் , காதலியாக வரும் போதும் சரி, ஆதரவற்ற மனைவியாக, கணவனின் குடி வெறிக்கு, எப்படி சமாளிப்பது என்று தடுமாறும் இடத்திலும் நிறைவான நேர்த்தியான நடிப்பை கொடுத்துள்ளார்..
கதையின் நாயகனாக இயக்குனர் ஜெய்கிருஷ்ணா, என்னம்மா ஒரு நடிப்பு..கல்லூரியில் படிக்கும் மாணவனாக பெரிதாக இல்லாத போதும், குடிக்கு அடிமையாகி, அல்லல் பட்டு இறந்து போகும் கடைசி காட்சி வரை.. அசத்தி விட்டார் நடிப்பில்..
யசோதாவாக நடித்திருக்கும் ஈஸ்வரி ராவும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
வலுவான செய்தியை சொள்ளியிருப்பதால் “ஆலகாலம்” விஷமல்ல மருந்து…
