கயல் ஆனந்தி, ஆர்.கே.சுரேஷ், ரூசோ ஸ்ரீதரன், விஜித், பேபி நக்‌ஷத்ரா, சசி லயா, பரணி, ரித்திகா சக்ரபோர்த்தி, ஹாசின், தரணி ரெட்டி ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் ஒயிட் ரோஸ்…

இசை : சுதர்சன்
ஒளிப்பதிவாளர் : வி.இளையராஜா
இயக்கம் : கே.ராஜசேகர்
தயாரிப்பு : என்.ரஞ்சனி

கணவரை இழந்த நாயகி கயல் ஆனந்தி தன் மகளை கந்து வட்டிக்காரர் கடத்தி செல்ல, வேறு வழியில்லாமல் மகளை மீட்பதற்காக பாலியல் தொழிலில் ஈடுபட முடிவு செய்து, அதற்காக பேருந்து நிலையத்தில் காத்திருக்க, ஆர்.கே.சுரேஷ் வந்து அழைத்து செல்கிறார் … அதன்படி, அவரது வீட்டுக்கு செல்பவர், அங்கு நிலவும் சூழலையும், சில விசயங்களையும் பார்த்து அங்கு ஏதோ தவறு நடக்க இருப்பதை உணர்ந்து போலீஸ் கட்டுப்பாட்டு அறையை தொடர்புக் கொள்கிறார்.
ஆனால், ஆனந்தியின் செல்போனில் சிக்னல் கிடைக்காததால், காவல்துறை ஆனந்தியை நெருங்க ஒரு பக்கம் முயலுகையில், இங்கு இருந்த ஆர்.கே.சுரேஷ் தனது விஸ்வரூபத்தை காட்ட தொடங்க, அரண்டு போகும் கயல் ஆனந்தி, அவரிடம் இருந்து எப்படி தப்பிக்கிறார் ?, சைக்கோ கொலையாளி ஆர்.கே.சுரேஷ் யார்?, கயல் ஆனந்தியின் மகள் கிடைத்தார்களா? என்பதே படத்தின் மீதிக்கதை.

மிரட்சி நிறைந்த நடிப்பை மிக சிறப்பாக தன் கண்களால் வெளிப்படுத்தியிருக்கிறார் கயல் ஆனந்தி..

சைக்கோ கொலையாளியாக நடித்திருக்கும் ஆர்.கே.சுரேஷ், வசனம் பேசாமல், ஒற்றை சிரிப்பால் சிரித்தும், தனது மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியிருக்காரு.

இளம் வயது ஆர்.கே.சுரேஷாக நடித்திருக்கும் பரணி பார்வையிலேயே மற்றவர்களை பயமுறுத்தும் விதத்தில் இருக்கிறார்.

இசையமைப்பாளர் சுதர்சனின் இசையில் பாடல்கள் அனைத்தும் ஓகே ரகம்.

திகில் காட்சிகளை விறுவிறுப்பாகவும், படபடப்பாகவும் காட்சிப்படுத்தி ரசிகர்களை சீட் நுணியில் உட்கார வைத்துவிடுகிறார். இயக்குனர் கே.ராஜசேகர்…