சுந்தர் சி இயக்கி நடித்து, தமன்னா, ராஷி கன்னா, யோகி பாபு, கோவை சரளா, விடிவிகணேஷ் உள்ளிட்ட பலரும் நடிக்க வெளி வந்திருக்கும் படம் அரண்மனை 4..

இசை – ஹிப் ஹாப் ஆதி

வீட்டை எதிர்த்து, காதல் திருமணம் செய்து கொண்டு கணவர் சந்தோஷ் பிரதாப்புடன் சந்தோஷமாக வாழ்ந்து வரும் நிலையில், சென்னை யின் வக்கீலாக பணி புரிந்து வரும் தமன்னா வின் அன்னனான சுந்தர் சி யிடம், தமன்னா தற்கொலை செய்து கொண்டதாகவும், அவரின் கணவர் நெஞ்சுவலியால் இறந்துவிட்டதாகவும் தகவல் வர, தமன்னா வாழ்ந்த ஊரில் இருக்கும் அரண்மனை க்கு செல்கிறார் சுந்தர் சி…அங்கு சென்ற பிறகு தான் அமானுஷ்ய சக்தியால் தன் தங்கை கொலை செய்யப்பட்டது அவருக்கு தெரிய வருகிறது. அந்த அமானுஷ்ய சக்தி தமன்னாவின் மகளையும் கொலை செய்யத் துடிக்கிறது என்று பல ஆய்வுகளுக்கு பின் தெரிய வர அந்த சக்தியிடம் இருந்து தமன்னாவின் மகளை காப்பாற்றுகிறாரா ? சுந்தர் சி. என்பதே அரண்மனை 4 படத்தின் கதை.

தமன்னா வழக்கம் போல் தாய்ப்பாசம் மிகுந்த அம்மாவாக அழகாக நடிசிருக்காங்க…

தமன்னா அளவிற்கு ராஷி கன்னாவிற்கு ஸ்கோப் இல்லை என்றாலும் கூட, தனக்கு கிடைத்த கதாபாத்திரத்தில் கச்சிதமாக நடித்துள்ளார்.

கோவை சரளா, யோகி பாபு, விடிவி கணேஷ் ஆகியோரின் நடிப்பு, சில நேரங்களில் சிரிப்பை வரவழைக்கிறது…

சுந்தர் சி, இயக்கி நடித்திருக்கிறார்…அண்ணண் தங்கை சென்டிமெண்ட் இன்னும் கொஞ்சம் தூக்கலாக இருந்திருந்தால் அதுவே படத்தின் மிகப்பெரிய பலமாக இருந்திருக்கும்…

இருந்தும் தனது பின்னணி இசை யால் ஹிப் ஹாப் ஆதி படத்தை தூக்கி நிறுத்தியுள்ளார்.. அதோடு VFX படத்திற்கு பலம் சேர்க்க அரண்மனை 4 சுந்தர் சி க்கு ஜாக்பாட்….