இன்றைய நடிகர்கள் பல பேரின் முன்னேற்றத்திற்கு துணை புரிந்த நல்ல கதைகளை கொடுத்து, காதல், குடும்பம் என்று, காதலின் மேல் நம்பிக்கையையும், குடும்ப உறவுகளின் மேல் பாசத்தையும், படம் பார்க்கும் போதே கண்ணீர் வரவழைக்கும் பாசிட்டிவ் உணர்வுகளை நமக்கு அளித்த இயக்குனர் விக்ரமன்… இன்று அவரது மகன் விஜய் கனிஷ்கா வை “ஹிட் லிஸ்ட்” என்ற படத்தில் ஹீரோவாக ஆக் கியிருக்கிறார் கள்..இயக்குனர்
சூரியகதிர் மற்றும் கே.கார்த்திகேயன்…

இசை – சி.சத்யா

விஜய் (விஜய் கனிஷ்கா) ஆரம்ப காட்சியிலேயே எலியைக் கூட கொல்லக்கூடாது என்று ஜீவகாருண்யம் பார்க்கும் அளவிற்கு இலகுவான மனிதர்… ஐடி ஊழியரான அவர் தனது தாய் (சித்தாரா) மற்றும் சகோதரி கீர்த்தி (அபி நட்சத்திரா) ஆகியோருடன் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வரும் நிலையில் விஜய்க்கு ஒரு நாள் முகமூடி அணிந்த மர்ம மனிதரிடமிருந்து அவரின் தாய் மற்றும் சகோதரியை கடத்தி வைத்திருப்பதாக போன் அழைப்பு வருகிறது. அவர்களை விடுவிக்கத் தான் சொல்வதை அப்படியே செய்ய வேண்டும் என்று மிரட்டல் விடுகிறார்.

முதலில் சேவலைக் கொல்லச் சொல்வதில் ஆரம்பித்து, அடுத்தடுத்து கொடூரமான ரவுடி காளியைக் (ராமச்சந்திர ராஜூ என்கிற கருடா ராம்) கொல்லச் சொல்லி உத்தரவு போட, கொஞ்சம் கொஞ்சமாக வயலன்ஸ் க் மாறுகிறான் விஜய்…உத்தரவு இடும் மர்ம மனிதன் யார் ?? கட்டளை யை நிறை வேற்றி அவர் தனது குடும்பத்தைக் காப்பாற்றுவாரா??, என்ற நீண்ட கேள்விகளுக்கு விடையே ஹிட் லிஸ்ட்…

தனது முதல் படத்திலே யே, மென்மையான மனம் கொண்ட, எலியின் மீது கருணை, காட்டும் ஜீவ காருண்ய இளைஞராக,சண்டை கட்சிகளில் தூள் கிளப்பும் நடிப்பும் கொண்டு பரீட்சையில் தேர்வு பெற்றிருக்கிறார்.இயக்குநர் விக்ரமனின் மகன் விஜய் கனிஷ்கா. …அழ்கும் திறனும் ஒரு சேர பெற்ற புதிய கதாநாயகன் கிடைத்திருக்கிறது தமிழ் சினமாவிற்கு…

கொடூர வில்லன் காளியாக ராமச்சந்திர ராஜூ..எல்லா படங்களிலும் இது தன் என் முன் கூட்டியே தெரிகிறது…

ACP அதிகாரியாக சரத்குமார், கம்பீரமாக கன கச்சிதமாக குடுத்த கதாபாத்திரத்திற்கு ஏற்ப, நடிசிருக்காரு…சிறிது நேரமே வந்தாலும் ஸ்மிருதி வெங்கட் நடிப்பு அபாரம்..

தனது குரு வுக்க் காணிக்கையாக அவரது மகனை ஹீரோ வாக்கி அழகு பார்த்திருக்கிறார் தயாரிப்பாளராக..இயக்குனர் கே. எஸ்.ரவிகுமார்…

சஸ்பென்ஸ் த்ரில்லராக வந்திருக்கும் “ஹிட்லிஸ்ட்”.. பார்க்க வேண்டிய லிஸ்ட் இல் உள்ள படம்…3/5..