
கடவுள் இருக்கிறார் என்று ஒரு சாரர் சொல்ல, அதை யும் மீறி சாத்தனே எமை ஆளும் சக்தி என்று கிளம்பும்
கும்பலின் வழிபாட்டு முறைகளைக் பற்றிய கதை… தி அக்காலி
ஜெயகுமார், தலைவாசல்’ விஜய் , நாசர், வினோத் கிஷண், ஸ்வயம் சித்தா, வினோதினி ஆகியோர் நடித்துள்ளனர்…
இயக்கம்- முகமது ஆசிப் ஹமீது
இசை – அனிஷ் மோகன்
கல்லறையில், பிணங்களை தோண்டி எடுத்து அக்குழியில் போதைப் பொருள் ஐ பதுக்கி வைத்திருப்பதாக தகவல் வர, போலீஸ் அதிகாரி ஹன்ஸா ரஹ்மான் (ஜெயக்குமார்) ரகசியமாகக் கண்காணிக்கச் செல்லுகிறார்.. சாத்தானை வழிபடும் கும்பல் அங்கு விசித்திரமான பூஜைகள் செய்வதையும், மனிதர்களை நரபலி கொடுப்பதையும் ஜெயக்குமார் கண்டுபிடிக்க, இடையூறாக, அவரை சுற்றி பல மர்மமான விஷயங்கள் நடைபெறுகிறது… இதனையெல்லாம் சமாளித்து, பிரச்னை யை எவ்வாறு தீர்க்கிறார் ?எண்பதே மீதி கதை…
இயல்பான போலீஸ் அதிகாரியாக ஜெயக்குமார் சிறந்த நடிப்பை கொடுத்திருக்கிறார்… ஸ்வயம் சித்தா வரும் இடம் குறைவாக இருந்தாலும்.. அதற்கான நடிப்பை கொடுத்திருக்காரு…மற்றபடி நாசர் வழக்கமான நடிப்பை தர, வினோத் கிஷனின் நடிப்பிற்கு இன்னும் கொஞ்சம் வாய்ப்பு கொடுத்திருக்கலாம்…
படத்தின் முன்பாதி கொஞ்சம் குழப்பமாக இருந்தாலும்,பின் பாதி யின் கதை வலுவாக இருக்கு…
வித்தியாசமான ஒளிப்பதிவும், எடிட்டிங்கும் இக்கதைக்கு முக்கிய பலமாக இருக்கு..
அக்காலி’ என்றால் இறப்பே இல்லாதவன் என்றும் சொல்லி அடுத்த பாகத்தினை எதிர்பார்க்க வைத்திருக்காரு இயக்குனர்…