
ஜே.டி, குரு சோமசுந்தரம், ஹரிஷ் உத்தமன், வினோத் சாகர், சாய் பிரியங்கா ரூத், ஹரிஷ் ராஜு, ஜாக் ராபின் ஆகியவர்களின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “பயமறியா பிரம்மை”..
சிறையில் தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கும் கொலை குற்றவாளி ஜெகதீஷ், தான் செய்த கொலைகளை கலை யாக பார்க்க, அவரின் வாழ்க்கையை புத்தகமாக எழுதுவதற்காக எழுத்தாளர் கபிலன் சிறையில் அவரை சந்திக்கிறார். அவர்கள் இருவருக்குமான உரையாடலே ” பயமரியா பிரம்மை “
ஜெகதீஷ் ன் வாழ்க்கையில் வெவ்வேறு காலக்கட்டங்களில் நடந்த சம்பவங்களை தொகுத்து நம் சிந்தனைக்கு வெவ்வெறு மனிதர்களாக வடிவம் கொடுத்து காட்டியுள்ளார் இயக்குனர்..
JD குடுத்த கதா பாத்திரத்தை ஏற்று நேர்த்தியாக நடித்துள்ளார்… வினோத் சாகர் மற்ற படங்களில் இருந்து தனித்துவம் பெற்று அமைதியாக வந்து போகிறார்…
பிரவின் மற்றும் நந்தா ஆகியோரது ஒளிப்பதிவும், கே -வின் இசையும் படத்திற்கு கூடுதல் பலம்…
கதை எழுதி இயக்கி தானே தயாரித்தும் இருக்கும் ராகுல் கபாலி க்கு கொலையை கலை யாக பார்க்கும் ஒரு மனிதனின் கதையை எடுக்கும் எண்ணம் தோன்றிய பின்புலம் எதுவாக இருப்பினும்….கதை ஒன்றாமல் புரியாத புதிராக உள்ளது…