நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், கமல்ஹாசன், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், ஷோபனா,பசுபதி, திஷா பதானி, அண்ணா பென் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் திரைப்படம் கல்கி 2898 ஏடி.

இசை: சந்தோஷ் நாராயணன்

கலியுகத்தில் அதர்மம் தாண்டவம் ஆடும் சமயத்தில் கலியை அழிக்க நானே அவதாரமெடுப்பேன். என்னை காப்பாற்றும் பொறுப்பு உன்னுடையது…அவ்வாறு காப்பாற்றும் தருணத்தில், உன் சாபம் தீரும் என அஸ்வத்தாமாவுக்கு சாபம் விடுகிறார் கிருஷ்ணர்..

குருக்‌ஷேத்ர போருக்குப் பிறகு பல யுகங்கள் கழிந்து , புது யுகமாக கலியுகம் தொடங்குகிறது. உலக போர்கள் நடந்து உலகம் மொத்தமும் அழிந்து, ஒரு சொட்டு நீர் கூட எளிதில் கிடைக்காத காசி நகரத்தில், பைரவா கதாபாத்திரத்தில் வரும் நாயகன் பிரபாஸ் வாடகை கூட கட்ட முடியாமல் ஏழை பங்காளனாக வாழ, காம்ப்ளக்ஸ் எனும் செல்வ செழிப்புள்ள இடத்திற்கு சென்றால் தான் நல்ல காற்றை சுவாசித்து, சந்தோஷமாக வாழ முடியும் என பல யூனிட்ஸ்களை சேகரிக்கிறார்…

மற்றொரு புறம், கல்கியை வயிற்றில் சுமக்கும் சுமதியை (தீபிகா படுகோன்) பிடித்துக் கொடுத்தால் பெரிய தொகை கிடைக்கும் என பிரபாஸ், அவரை பிடித்துக் கொடுக்க முயற்சிக்க, சுமதியை தன் அம்மாவாக பாவித்து, அஸ் வதம்மா பிரபாசிடம் சண்டை போடுகிறார்.

சம்பாலா எனும் ரகசிய இடத்தை நெருங்கி, சுமதியை கடத்தி, சுப்ரீம் யஷ்கினின் (கமல்ஹாசன்) ஆட்களுக்கு காட்டிக் கொடுக்க, இறுதியில் என்ன நடக்கிறது என்பது தான், கல்கி 2898 ஏடி படத்தின் கதை.
இதில் பிரபாஸை விட அசுவத்தாமன் ஆக வந்த அமிதாப் தான் ரியல் ஹீரோ, 6000 வருடம் மேல் உயிரோடு ஒரு உயிரை பாதுக்காக்க அவர் எடுக்கும் தவம், அந்த குழந்தை உருவானதும் ஒரே ஆளாக அமிதாப் ஆடும் ஆட்டம் ருத்ரதாண்டவம்.

அதோடு அந்த கருவை சுமக்கும் பெண்ணாக தீபிகா படுகோன், அவரை காப்பாற்ற போராடும் அண்ணாபென், ஷோபனா, பசுபதி என அனைவரும் நிறைவான நடிப்பு.

ஆங்கிலப் படங்களை தோற்கடிக்கும், அளவிற்கு கிராபிக்ஸ் காட்சிகள், அதிலும் கமல் வாழ்ந்து வரும் காம்ப்ளக்ஸ் உலகம், லிஃப்ட் , அது அழைத்து செல்லும் போது நடு நடு வில் தெரியும், பல செழிப்பான இடங்கள், bhujji, ரோபோட் இப்படி சொல்லி கொண்டே போலாம்..மேலும் படத்தின் VFX காட்சிகள்
இரண்டாம் பாதியின் வரும் சேஸிங் காட்சிகள் அற்புதம்..

முதலாம் பகுதியில், அமிதாப் தான் ஹீரோ என்றால், அடுத்த பார்டில், நம்மவரின், ஆட்டத்தை , காணும் ஆவலை ஏற்புடுத்துகிறார்…இயக்குனர் நாக் அஸ்வின்…