
அஜித் விநாயகா ஃபிலிம்ஸ் தயாரிப்பில், அருண் சந்து இயக்கத்தில் அஜு வர்கிஸ், அனார்கலி மரிகர், கோகுல் சுரேஷ்,கணேஷ் குமார் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் ‘ககனாச்சாரி’..
2050-ம் காலக்கட்டத்தில் கதை நடக்க, அரசின் அடக்குமுறை, பெட்ரோல் வாகனங்களுக்கு பதிலாக மின்சார வாகனங்களை பயன்படுத்தும் கட்டாயம், மக்களை கண்காணிக்க ஒவ்வொரு வீட்டிலும் அரசின் கருவி ஒன்று பொருத்தப்பட, அதை கண்காணிக்க காவல்துறை என்று கதை போகிறது…
ஏலியனை வேட்டையாடி வீட்டிற்கு கொண்டு வந்த முன்னாள் ராணுவ வீரர் கணேஷ் குமார், போலீஸின் அச்சுறுத்தலில் இருந்து தன்னை பாதுகாத்துக்கொள்ளும் விதமாக, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பாது காப்பாக வாழ்ந்து வருகிறார்… அவருக்கு உதவியாளர்களாக கோகுல் சுரேஷ் மற்றும் அஜு வர்க்கீஸ் இருக்கிறார்கள்.
250 வயதாகும் அந்த ஏலியன் மீது, 25 வயதாகும் கோகுல் சுரேஷுக்கு காதல் வர, அந்த காதல் காமெடியாக பயணித்தாலும், ஏலியன் பெண்ணுடனான காதலினால் என்னென்ன இடையூறு நேர்கிறது ?? பூமியில் ஏலியன் தாக்குதலுக்கு ஆளாக, ஏலியனை காப்பாற்றி வின்னுலகுக்கு, அனுப்பும் ஆவணப்படத்தை திரை பாணியில் விளக்கி சொல்வது தான் ‘ககனாச்சாரி’.
சங்கர் சர்மாவின் இசையில் பின்னணி இசை வித்தியாசமாக கதையோடு ஒன்றி போனாலும், இக்கதையை
இயக்குநர் அருண் சந்து வசனங்கள் மூலம் நகர்த்தி செல்வதால், மலையாள ரசிகர்களால் மட்டுமே இந்த படத்தை கொண்டாட முடியும்.