
திருவண்ணாமலை மாவட்டத்தில் வாழ்ந்த ஒரு கூத்து கலைஞனின் வாழ்வில் நிகழ்ந்த நிஜ சம்பங்களை கொண்டு வந்திருக்கும் படம் ஜமா…
நாயகன் பாரி இளவழகன் (இயக்குனரும் கூட)சேத்தன் நடத்தும் கூத்து ஜமாவில் குந்தி மற்றும் திரளெபதி ஆகிய பெண் வேடமிட்டு ஆடும் கூத்து கலைஞன். என்றாவது ஒரு நாள் அர்ஜுனன் வேடம் இட்டு கூத்தாட வேண்டும் என்பதே அவனின் மிகப் பெரிய ஆசை, இலட்சியமும் கூட…ஆனால் அதற்கு ஜமாவின் ஆசிரியர் ஆன சேத்தன் ஏற்க மறுக்கிறார். பாரி இளவழகனின் அப்பாவும் சேத்தனும் ஒருகாலத்தில் ஒன்றாக இருந்து ஒரு சண்டையில் பிரிய, அந்த ஜமா வை ஏமாற்றி சேத்தன் அனுபவிக்க, இடையில், சேத்தனின் மகள் அம்மு அபிராமிக்கு பாரி இள வழகனின் மேல் காதல் மலர்கிறது… இதை சற்றும் எதிர்பாராத சேத்தன் பாரியை விரட்ட, அந்த காதலும் வேண்டாம், கல்யாணமும் வேண்டாம் என்று சேத்தனி ன் ஜமா வில் மீண்டும் கூத்து கலை ஞனாக வேடம் கட்டுகிறார்…அவரின் எண்ணமும் இலட்சியமும் நிறைவேறியதா ? அர்ஜுனன் வேடம் இட்டரா ??என்பதே மீதி படம்…
நாயகன் பாரி இளவழகன், கூத்து கட்டுவதற்கு முன், பின் என்று இரண்டு விதமான உடல் மொழியினை கொண்டு நடிப்பில் அசத்தியிருக்காரு..ஊர் பெண்களிடம் வாயாடுவதிலும் சரி, தண்ணை காதலிக்கும் அம்மு வை கண்டு ஓடும் இடத்திலும் சரி வட்டார பேச்சிலும் அசத்தல்..
பொறாமையும் பழி உணர்ச்சியை யும், தன் கண்களில் கொப்பளிக்க, இதுவரை இல்லாத நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் சேத்தன்…
அம்மு அபிராமி கிடைத்த இடங்களில் எல்லாம் நல்ல நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்
இளையராஜா வின் இசை இப்படத்தில் முக்கிய பங்கு வகித்துருக்கிறது..இவரின் இசையில் நாயகன் குந்தி தேவி வேடமிட்டு, ஒப்பாரி இட்டு அழும் இடத்தில், தனது அபரிதமான நடிப்பை வழங்கி, நம்மளையும் அழ வைத்து விடுகிறார் இயக்குனர்….