
டாப் ஸ்டார் பிரசாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘அந்தகன்’ திரைப்படத்தை தியாகராஜன் இயக்கி தயாரித்துள்ளார். சிம்ரன், பிரியா ஆனந்த், ஊர்வசி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கும் இப்படம் வரும் ஆகஸ்ட் 9 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
தற்போது படத்தின் புரோமோஷன் பணிகளில் தீவிரம் காட்டி வரும் படக்குழுவினர் பல்வேறு இடங்களுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளனர். அந்த வகையில், கோவையில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் பிரஷாந்த், படம் குறித்து கூறுகையில், “
அந்தகன் திரைப்படம் பார்வையற்ற பியானோ கலைஞர் பற்றிய இசை சார்ந்த படம். அதேசமயம் மர்மங்கள் நிறைந்த சுவாரஸ்ய அம்சங்கள் பொருந்திய படமாகவும் இருக்கும். விநியோகஸ்தர்கள் கேட்டுக் கொண்டதன் பேரில், வரும் ஆகஸ்ட் 9ஆம் தேதி படம் வெளியாக உள்ளது. இந்த திரைப்படம் ரீமேக் படம் இல்லை, ரீமெட் படம். 110 சதவீதம் தமிழ் படம் பார்க்கும் அனுபவத்தை கொடுக்கும்