
பிடிஜி யுனிவர்சல் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தயாரிக்கும் சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் திரைப்படத்தின் டீசர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ். இத்திரைப்படத்தில் வைபவ், அதுல்யா ரவி,மணிகண்டா ராஜேஷ், ஆனந்தராஜ், இளவரசு, ஜான் விஜய், சுனில் ரெட்டி, ரெடின் கிங்ஸ்லி, மொட்டை ராஜேந்திரன்,பிபின்,ஹுசைனி உள்பட முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.கடந்த ஏப்ரல் மாதத்துடன் முழு படப்பிடிப்பும் முடிந்து வெளியிட்டுக்கு தயாராகியுள்ளது.
அதனையொட்டி இத்திரைப்படத்தின் டீசர் மற்றும் இசை வெளியீட்டு விழா இன்று(18-08-24) சென்னையில் நடைபெற்றது. திரைப்பட குழுவினர்களும் தொழில்நுட்ப கலைஞர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர
இயக்குனர் விக்ரம் ராஜேஷ்வர் ,பேசியதாவது,
இயக்குனர் விக்ரம் ராஜேஷ்வர் பேசும்பொழுது,”இந்த வாய்ப்பளித்த பாபி மற்றும் மனோஜ் பெனோ இருவருக்கும் நன்றிகள். சிறந்த பாடல்களை அளித்த, என்னுடைய பள்ளித் தோழர் இமான் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள். படப்பிடிப்பின்போது நன்கு ஒத்துழைப்பு அளித்த வைபவ் மற்றும் அதுல்யாவுக்கும் மிக்க நன்றி”, என்றார்.
இசையமைப்பாளர் D இமான் பேசியதாவது
இசையமைப்பாளர் D இமான் பேசும்பொழுது,”பிடிஜி யுனிவர்சல் தயாரிப்பில் இத்திரைப்படத்தில் பணியாற்றியதற்கு மிக்க மகிழ்ச்சி. அவர்கள் பிடிஜி யுனிவர்சல் இசை வெளியீட்டு நிறுவனத்தையும் துவங்கி உள்ளனர். அதன் மூலம் இத்திரைப்படத்தின் பாடல்கள் வெளியாவது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும், பாடலாசிரியர்களும், பாடகர்களும் சிறப்பாக பணியாற்றியுள்ளனர். வைபவ்,அதுல்யா மற்றும் படக்குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள்”, என பேசினார்.
வியூகத் தலைமையாளர் மனோஜ் பெனோ
வியூகத் தலைமையாளராக இருக்கும் மனோஜ் பெனோ பேசும்போது, “பாபி பாலச்சந்திரனை எனக்கு சிறுவயதிலிருந்தே தெரியும். பாபி அவர்கள் இதுவரை ஈடுபட்டிருக்கும் அனைத்து தொழில்களும் வெற்றி அடைந்துள்ளன. அதேபோல இதுவும் வெற்றிடைய வேண்டும் என அவரது தந்தை விரும்பினார். “டிமான்ட்டி காலனி-II” திரைப்படம் மூலமாக எங்களுக்கு முதல் வெற்றியை அளித்த இயக்குனர் அஜய் ஞானமுத்து மனமார்ந்த நன்றிகள் மற்றும் எங்களது அடுத்த படமான சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் திரைப்படமும் வெற்றியடைய வேண்டும். அடுத்த படமான ரெட்டதலயும் 75% படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டது. அதன் ஹீரோ அருண் விஜய் இங்கு வந்து வாழ்த்தியதற்கு மிக்க நன்றி. விக்ரம் ராஜேஷ்வர் போன்ற புது இயக்குனர்களுக்கு வீட்டில் சார்பில் நிறைய வாய்ப்புகள் காத்துக் கொண்டிருக்கின்றன. இந்த திரைப்படம் வெற்றியடைய உங்களது அனைவரது ஆதரவையும் வேண்டுகிறேன்”, என முடித்தார்.