1969 வட சென்னை யில் அரசாங்கத்தால் சீல் வைக்கப்பட்ட  பிரபல பார்வதி மதுக் கடையை மீண்டும் திறந்து கையகப்படுத்த முயலும்   இரண்டு கோஷ்டியினருக்கும் இடையே நடக்கும் அதிகார போராட்டமே “சாலா”..

மது கடையின் ஒனாரான அருள்தாஸ் க்காக வுயிரையு ம் கொடுக்கமளவுக்கு விசுவாசம் கொண்ட சாலா (தீரன்) விற்கு, வட சென்னையில் அதிக அளவு பார் திறக்க வேண்டும் என்று ஆசை ஒரு புறம் இருக்க, இருக்கும் மது கடைகளை எல்லாம் ஒழிக்க வேண்டும் என்று அற வழியில் போராடும் நாயகி புனிதா(ரேஷ்மா வெங்கடேஷ்) மேல் காதல்.. இன்னொரு புறம் போலி மது பானங்களை தயாரிக்கும் சார்லஸ் வினோத்  க்கும் பார்வதி மதுக் கடையை ஏலம் எடுத்து வட சென்னை யை தன் கைக்குள் கொண்டு வர வேண்டும் என்ற வெறி.. இவர்கள் இருவரின் மோதலில் பார்வதி பார் யார் கைக்கு சென்றது? எதிர் மறை கருத்துக்கள் கொண்ட இருவரின் காதல் என்னவானது ?? என்பது மீதி கதை..

ஓங்கி அடிச்சா ஒன்ற டன் வெயிட் ந்ற மாதிரி திரும்பி அடிச்சா 10 டன் வெயிட் நு சொல்லுமளவிற்கு நெடு நெடு நூ விரிந்த மார்போடு நிற்கும் சூரன் ஆக நாயகன் தீரன்..கன கச்சிதமான கதாபாத்திரம்…அழுகு பதுமையாக ரேஷ்மா வெங்கடேஷ், குடுத்த கதாபாத்திரத்திற்கு ஏற்ப நடிச்சிருக்காங்க…

பள்ளி படிப்பின் போதே, மது பிரியர்களாகி, அதன் மூலமாகவே அவர்கள் அழிய நேரிடும் போது, அந்த மூன்று சிறுவர்களின் நடிப்பும் சிறப்பு..

இறுதியாக மது பழக்கம் மக்களின் வாழ்கையை எப்படியெல்லாம் சீரழிக்கிறது என்பதைப் பாடமாக சொல்லியிருக்கிறார் இயக்குனர் எஸ்.டி. மணிபால்.