சசிகுமார், பாலாஜி சக்திவேல், சமுத்திரக்கனி ஸ்ருதி பெரியசாமி ஆகியோரின் நடிப்பில் வெளி யாகியிருக்கும் படம் ‘நந்தன்’…இயக்கம் இரா. சரவணன்

வணங்கான்குடி ஊரில் பிரெசிடெண்ட் பதவிக்கான எலெக்‌ஷன் வர இருக்கும் நிலையில், மேல்தட்டு சாதியை சேர்ந்த கோப்புலிங்கம் (பாலாஜி சக்திவேல்) மற்றும் அவ்வூர் பெரிய தலைகட்டுகளும் கோவில் நடையில் அமர்ந்து பேச, தலைவர் பதவியைத் தனக்கான மரியாதையாகவும் தான் சாதிக்கான அங்கீகாரமாக பார்க்கும் பாலாஜி சக்திவேல், தன்னை எதிர்த்து யாரும் தலைவராக வரகூடாது, என சாமர்த்தியமாக காய் நகர்த்துகிறார்..கோப்புலிங்கத்திடம் பல ஆண்டுகளாக அடிமை போன்று வேலை செய்து வருபவர் அம்பேத் குமார்(சசிகுமார்). கோப்புலிங்கம் தன்னை தரைக்குறைவாக நடத்தினாலும் அவருக்கு விசுவாசமாக உழைக்கிறார் கூழ் பானை எனும் பேர் கொண்ட சசிகுமார்..ஒரு கலவரத்தில் அந்த கிராமம் தனி பஞ்சாயத்து தொகுதியானதும், பட்டியல் இனத்தில் ஒருவர் தான் வேட்பாளர் ஆக முடியும் என்ற தருவாயில், ஆமாம் சாமி போடும் அம்பேத் குமாரை போட்டியின்றி தலைவராக்குகிறார் கோப்புலிங்கம்….

தான் ஆட்டி வைத்தபடி எல்லாம் அம்பேத் குமார் ஆடுவார் என்கிற நினைப்பில் கோப்பு லிங்கம் இருக்க,
தலைவரானதும் ஊர் மக்களுக்காக நல்லது செய்ய ஆரம்பிக்கும் அம்பேத்குமார் ன் செயல்கள், இவரை வெருப்படைய செய்ய, அம்பேத்குமாரை நிர்வாணப்படுத்தி, பஞ்சாயத்து தலைவர் பதவியை ராஜினாமா செய்யும்படி சொல்கிறார் கோப்பு லிங்கம். விசுவாசியான அம்பேத்குமார் ராஜினாமா செய்தாரா ?? அடுத்து நடப்பது என்ன ? என்பதே மீதி கதை.

வெற்றிலை வாயை குழப்பி, சாதிய ஆணவத்த தலையில் சுமந்து, குதர்க்க மான முகத்துடன் திரியும் கதாபாத்திரத்தில் சரியாகப் பொருந்தி போய் இருக்கிறார் இயக்குநர், நடிகர் பாலாஜி சக்திவேல்..

தன் தாயின் இறப்பிற்கு கூட இடம் கொடுக்காத, பஞ்சாயத்து பிரஸிடென்ட், தன்னை நிர்வானபடுத்தியும், அவர் மேல் கோபம் எழாத அளவுக்கு, அடங்கி போகும் விசுவாசியாக சசி குமார் சிறப்பாக நடித்திருக்கிறார்..
குடுத்த கதாபாத்திரத்தில், ஸ்ருதி பெரியசாமி மற்றும் சமுத்திரகனி நடிக்க,

ஆளறதுக்குதான் அதிகாரம் தேவைன்னு நினைச்சிட்டு இவ்வளவு நாள் ஒதுங்கியே இருந்தோம். ஆனா, இங்க வாழ்ரதுக்கே அதிகாரம் தேவைப்படுது’ போன்ற நச் வசனங்கள் இயக்குனர் சரவணனின் என்ன ஓட்டங்களின் மைல்கல்.. ஜிப்ரானின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம்…