அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் , ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ் , காளி வெங்கட், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி , பால சரவணன் , கீதா கைலாசம் உள்ளிட்டவர்கள் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் – “லப்பர் பந்து”

இசை – ஷான் ரோல்டன்

ஜாலி ஃப்ரண்ட்ஸ் கிரிக்கெட் குழு வின் தலைவன் காளி வெங்கட்…அக்குழுவிற்காக ஆடவேண்டும் என்பதே நாயகன் அன்பு வின்( ஹரிஷ் கல்யாண்) சிறு வயது ஆசை. ஆனால் அவனது சாதியை காரணம் காட்டியே அவனை டீமில் சேர்த்துகொள்ள மறுத்துவிடுகிறார் வைஸ் கேப்டன் ஆக வரும் வெங்கடேஷ்…தனது சொந்த ஊர் இல் உள்ள டீமால் மறுக்கப்படும் அன்பு கிரிக்கெட் மேல் உள்ள தீர காதலால் அவ்வப்போது பல்வேறு கிரிக்கெட் குழுவில் கெஸ்ட் வீரனாக விளையாடுகிறான்.

அதே போல் மற்றொரு ஊரில் பெயர்போன கிரிக்கெட் ப்ளேயராக இருக்கிறார் கெத்து தினேஷ் (அட்டகத்தி தினேஷ்). இவர் மட்டையை கையில் எடுக்கும் ஒவ்வொரு சமயத்திலும், விஜயகாந்த் பாட்டு பின்னணியில் ஒலிக்க , கெத்து மட்டையை சுழட்டி வரும் எல்லா பந்தை யும் மைதானத்திற்கு வெளியேதான் அடித்து தூள் கிளப்புவார். அப்படிப்பட்ட கெத்து வே ஒருவரை பார்த்து பயப்படுகிறார் என்றால் அவரது மனைவிக்கு மட்டுமே…
வேலைக்கு செல்வதாக சொல்லிக்கொண்டு கிரிக்கெட் விளையாட செல்வதே கெத்து வின் பயத்திற்க்கு காரணம்..

மறுபக்கம் கெத்து வின் மகள் துர்காவும் அன்புவும் காதலிக்கத் தொடங்குகிறார்கள். இதற்கிடையில்
கிரிக்கெட் போட்டி ஒன்றின் போது கெத்து, மற்றும் அன்பு வின் இடையில் சின்ன  மோதல் ஏற்பட, இந்த மோதல் கொஞ்சம் கொஞ்சமாக பெரிதாகி ஒரு கட்டத்தில் சண்டையில் முடிகிறது. கெத்து வின் மகள் துர்கா வுக்கும் அண்புவிற்கும் திருமண ஏற்பாடு நடக்க விருக்கும் தருவாயில், தன் பரம எதிரி அண்பு தான் வரவிருக்கும் மருமகன் என்று தெரிய வர, இருவருக்கும் இடையில் கிரிக்கெட்டில் வரும் ஈகோ பிரச்சனை யால், சண்டை வர, அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையிலும் சிக்கல் ஏற்படுகிறது. இந்த சிக்கலை தீர்த்து அன்பு வும் துர்கா வும் இணைகிறார்களா? என்பதே மீதக்கதை..

ஹரிஷ் கல்யாண் மற்றும் அட்டகத்தி தினேஷ் இருவருக்குமே முக்கியத்துவம் சம அளவில் கொடுக்கப்பட்டு, அவர்களும் அதர்கேற்றார் போல் நடித்திருக்கிறார்கள்…

நீண்ட இடைவெளிக்கு பிறகு வந்திருக்கும் கெத்து வின் மனைவியாக சுவாசிகா விஜய் அருமையான நடிப்பு…

நண்பராக வரும் பால சரவணன் , ஜென்சன் திவாகர் , காளி வெங்கட் ஆகியவர்களின் கதாபாத்திரங்கள் சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருக்கின்ற்ன.
கிரிக்கெட் படம் என்று நினைத்து போவோர்களுக் கு, காதல், பாசம், நட்பு, நெகிழ்ச்சி, விளையாட்டு கொஞ்சம் அரசியல் என அத்தனையும் குழப்பி, லப்பர் பந்தை வேகமாக , படத்தில் வருவது போல், இரண்டு தென்னை மரத்தை தாண்டி போகுமளவிற்கு சிக்ஸர் அடித்திருக்கிறார் இயக்குனர்..