
ஹரிஹரன் பஞ்சலிங்கம் தயாரிப்பில், மைக்கேல் தங்கதுரை, கவிபிரியா மனோகரன், ஸ்ரீ ரஞ்சனி, கலைராணி நடிப்பில் அருண் கே .ஆர் இயக்கி வெளி வந்திருக்கும் படம் “ஆரகன்”..
மன்னர்கள் வாழ்ந்த வந்த காலத்தில், இரண்டாம் இளந்திரையன் நாட்டை விட்டு காட்டுக்கு வந்து முனிவர் ஒருவரிடம் தஞ்சம் அடைந்து முனிவருக்கு அரணாக இருக்கிறார், இவரின் பணிவிடையில் மகிழ்ந்து போன முனிவர் நீ விரும்பும் வரம் ஒன்றை கேள் என சொல்ல, அவரும் ஒரு வரத்தை கேட்கிறார்…அது என்ன ? என்பது தெரியாத போது, கதை தொடங்குகிறது…
இந்நாளில்..அனாதை இல்லத்தில் வளர்ந்த ஓர் இளம் பெண்ணுக்கும் ( கவிபிரியா மனோகரன்) ஒரு இளைஞனுக்கும் (மைக்கேல் தங்கதுரை) காதல் வர, தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு நிலா கேட்க, அதிகமான பணம் சேர்த்து பின் வாழ்கையை நடத்துவதே உசிதம் என சொல்கிரார் நாயகன் மைக்கேல்., தன் பங்குக்கும் அதிகமாக பணம் சேர்த்து தருகிறேன் என்று, மலை கிராமத்தில் செல்ஃபோன் டவர் கூட கிடைக்காத, வசதி அற்ற, தனிமையில் வசிக்கும் ஒரு பெண்ணிற்கு வேலை செய்ய செல்கிறாள்..
அங்கே நடக்கும் அமானுஷ்ய, அப்நார்மல், மனோவியல் நிகழ்வுகள் .. அவளுக்கு விரிக்கப்பட்ட வலை… என்பது தெரியாமல் தவிக்க, அது எதனால், ? என்றும், அது தெரிந்த பின்பு என்ன நடக்கிறது என்பதே கதை..
இயல்பான கதையில் ஆரம்பித்து, நாயகி காட்டுக்குள் சென்றதும் டுவிஸ்ட் கொடுத்து வேகமெடுக்கிறது…
கதைக்கான பலம் நாயகி கவிபிரியா மனோகரன். அவரது தோற்றம் , நடையுடை பாவனை, எதையும் நம்பு வெள்ளந்தி குணம் என்று நம்பும் படி அழகாக நடித்துள்ளார்…
மைக்கேல் தங்கதுரை கச்சிதமாக நடித்துள்ளார்..கதாபாத்திரங்களின் தேர்வு சரியாக இருக்க,
கலைராணி, ஸ்ரீ ரஞ்சனி இருவரும் தங்களுக்கான பங்களிப்பை சிறப்பாக கொடுத்துள்ளனர்.
நம்ப முடியாத கூற்றுகள் இருப்பினும், அதை சுவராசியமாக, கொண்டு சென்றுள்ளார் இயக்குனர்.. ஆராகன் சஸ்பென்ஸ் த்ரில்லர் படமாக ரசிக்கும் படியாக வந்திருக்கு ஆரகன்.