
ஜோஜு ஜார்ஜ் இயக்கத்தில் அபிநயா, ஜோஜு ஜார்ஜ், சாந்தினி, சீமா மற்றும் பலர் நடித்து வெளவந்திருக்கும் படம் ” பணி”..
திருச்சூரில் ‘மங்கலத்’ குடும்பத்தில் முக்கியமான ஒருவர்தான் கிரி. (ஜோஜு ஜார்ஜ்). ரியல் எஸ்டேட் மற்றும் பில்டர்ஸ் தொழிலின் , மாஃபியா சின்டிகேட் ஆக வலம் வரும் இவருக்கு, கல்லூரி தோ ழர்களான (பிரசாந்த் அலெக்சாண்டர், பாபி குரியன், சுஜித் சங்கர்) ஆகியோர் பக்க பலமாக செயல்பட்டு வருகிறார்கள். அதோடு, கிரியின் தங்கையை மணந்து, கிரி யின் குடும்ப உறுப்பினராகவும், தொழில் நண்பர்களாகவும் இருக்க,
கிரியின் காதல் மனைவி கௌரி(அபிநயா)..வோடு குடும்பத்தார்கள் அனைவரும் சந்தோஷமாக ஒரு புறம் இருக்க,
அதே திருச்சூரில், அப்பாவி போல் முகம் கொண்டு, கொடூர எண்ணம் கொண்ட இரு (சாகர் சூர்யா, ஜூனைஸ் வி.பி) மெக்கானிக் நண்பர்கள் கூலிப்படையாக மாறி பட்டப்பகலில் ஜனநடமாட்டம் உள்ள நகரின் மையப்பகுதியில் ஒருவரைத் திட்டமிட்டுக் கொலை செய்கிறார்கள். இதனால் 10 லட்சம் ரூபாய் பணமும் கிடைக்க அந்த வாழ்க்கை அவர்களுக்குப் பிடித்துப்போகிறது. அந்த பணத் திமிரு இரத்தத்தில் கலக்க, ஒரு டிப்பார்ட்மென்ட் ஸ்டோரில் கிரியின் மனைவி அபினயாவிடம் அத்து மீறி கிரியிடம் செமத்தியாக அடிவாங்குகிறார்கள்.
அடிபட்ட அவமானத்திலும், வலியிலும் கிரியையும் அவனது குடும்பத்தையும் பழிவாங்க கிளம்புகிறார்கள். அதில் கிரிக்கு ஏற்படும் இழப்பு என்ன ?? .. அதற்காக கிரி அந்த இரண்டு இளைஞர்களை யும் எப்படி பழிவாங்குகிறார் என்பதே மீதிக்கதை.
கேங்ஸ்டர் பின்னணியில் விறுவிறுப்பாக கதை சொல்லியிருக்கிறார் ‘அறிமுக’ இயக்குநர் ஜோஜு ஜார்ஜ். அபிநயா வை அழகு பதுமையாக கான்பிப்பதில் இருந்து, சைக்கோ வில்லன்களை ஸ்கெட்ச் போட்டு, நேருக்கு நேர் பந்தாடுவது வரை, விறு விறு என திரைக்கதை யை நகர்த்தி சென்றிருக்கிறார்..இயக்குனரும் நடிகருமான ஜே ஜூ ஜியார்ஜ்…
நமக்கே வெறுப்பு வரும் அளவிற்கு நடித்திருக்கிறார்கள் சாகரும் ஜூனைஸும்.
மனு ஆண்டனி யின் எடிடிங்குடன், விஷ்ணு விஜய் யின் பின்னணி இசையும் கலக்க, ஆக்சன் ரிவெஞ் திரில்லரோடு, அடிபொலி படமாக வந்திருக்கு ‘ பணி ‘..