
பாலாஜி கேசவன் இயக்கத்தில் அசோக் செல்வன் அவந்திகா, எம்எஸ் பாஸ்கர், அழகம்பெருமாள், ஊர்வசி, படவா கோபி உட்பட பலர் நடித்து வெளி வந்திருக்கும் படம் எமக்கு தொழில் ரொமான்ஸ்..
சினிமா வில் உதவி இயக்குனராக பணி புரியும் அசோக் செல்வனிற்கு, தனியார் மருத்துவமனையில் நர்சாக பணிபுரியும் அவந்திகா மேல் காதல் வருகிறது..
அசோக் செல்வனின் நெருங்கிய தோழி ஒருவர் கர்பமாக, அவளின் காதலனோ வெளிநாட்டிற்கு சென்று விட, அவளுக்கு உதவும் பொருட்டு அதாவது தோழியின் கர்ப்பத்தை கலைக்க உதவி செய்கிறார்..
இந்த விஷயம் அசோக் செல்வனின் காதலி அவந்திகா வுக்கு தெரிய வர, அது பெரிய பிரச்சனையே கிளப்பி விடுகிறது. இதற்கடுத்து அசோக் செல்வனின் காதல் என்ன ஆனது ? என்பதே மீதிக் கதை..
காதல் கதைகளில் எப்போதும் அசத்தும் அசோக்செல்வன் இப்படத்திலும் சிறப்பாக செய்திருக்கிறார் .. இவரை தொடர்ந்து படத்தில் வரும் மற்ற நடிகர்களுமே தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்தில் சிறப்பாக செய்திருக்கிறார்கள்..
முதல் பாதி ய விட இரண்டாம் பாதி நகைச்சுவை க்கு பஞ்சம் இல்லாமல் வேகம் எடுத்து விறு விறு என செல்கிறது…
இந்த படத்திற்கு கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்து இருக்கிறார், நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்திருக்கிறார்
மொத்தத்தில் ரசிக்கும்படியான நகைச்சுவை விருந்து…