சக்தி சிதம்பரம் இயக்கத்தில் பிரபு தேவா, அபிராமி, மடோனா செபஸ்டியன், யோகிபாபு மற்றும் பலர் நடித்து வெளி வந்திருக்கும் படம் “ஜாலியோனா ஜிம் கானா”…

செல்லம்மா மற்றும் அவரது 3 மகள்கலோடு பிரியாணி கடை ஒன்றை நடத்தி வர, இவர்களுக்கு எம்.எல்.ஏவிடமிருந்து ஒரு பெரிய ஆர்டர் கிடைக்கிறது. அதை இவர்களும் சிறப்பாக செய்து கொடுக்கிறார்கள். ஆனால், அதற்கான பணத்தை கொடுக்காமல் எம்எல்ஏ ஆட்கள் ஏமாற்றுகிறார்கள். இதைக் கேட்க போன பவானியின் தாத்தாவையும் அவர்கள் தாக்கி விட, பவானியின் தாத்தா y.g. மகேந்திரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
அவர், வழக்கறிஞர் பூங்குன்றனை சந்தித்து பிரச்சனையை சொல்ல சொல்ல சொல்லி அவர்களை அனுப்பி வைக்கிறார்..பவானி குடும்பமும் பூங்குன்றனின் உதவியை கேட்டு போகிறார்கள். ஆனால், அங்கு அவரை யாரோ கொலை செய்து விட, அந்த கொலை பழி தங்கள் மீது விழுந்து விடுமோ என்ற பயத்தில் அவருடைய உடலை மறைத்து வைக்க பாடுபட்டு, அது முடியாத காரணத்தினால், பினத்தோடு பயணிக்கும் காமெடி கலாட்டா தான்
ஜாலியோனா ஜிம் கானா…

படம் முழுவதுமே பிரபுதேவா சடலமாக அட்டகாசமாக நடித்திருக்கிறார்….இது அவருடைய படமாக இருக்கும் பட்சத்தில், மற்ற படங்களை போல் இல்லாமல் கொஞ்சம் வித்தியாசமான அனுபவத்தை கொடுத்தது எனலாம்.

அபிராமி, மடோனா, யாழினி மற்றும் ஷிவானி ஆகியோர் மூத்த நடிகர்களுக்கு ஈடு கொடுத்து நடித்துள்ளனர்..

படத்தினுடைய ஆரம்பத்திலேயே இயக்குனர் லாஜிக் பார்க்காமல் படம் பார்த்தால் ஜாலியாக இருக்கும் என்று சொல்லிவிடுவதால்… ஜலியான்னோ ஜிம்கானா ஒரு ஜாலியான டூர்…