பிரைடே ஃபிலிம் பேக்டரி கேப்டன் M.P. ஆனந்த் தயாரித்து,
பரத், பவித்ரா லட்சுமி, அபிராமி, அஞ்சலி நாயர், தலைவாசல் விஜய், ராஜாளி, கன்னிகா,ஷான் பிஜிஎஸ் கல்கி,ராஜாஜி, ஆகியோர் நடித்து வெளி வந்திருக்கும் படம் ‘ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்,.

சில வருடங்களுக்கு முன்பு நடந்த உண்மை சம்பவம் ஒன்றை மையக் கருவாக வைத்து இயக்குநர் பிரசாத் முருகன் அருமையாக கதை சொல்லியிருக்கிறார்..

காதல் மனைவியின் வுயிரை காப்பாற்ற எதையும் செய்யும் ஆட்டோ கார வாலிபராக பரத்,
ஒற்றை பெண்ணாக தன் மகனை(திருநங்கை) வளர்த்து மருத்துவராக ஆக்க வேண்டும் என்ற கனவோடு வாழும் அபிராமி,
அப்பாவின் ஆசைக்காக திருமண பந்தத்தில் இணைந்து, தன் சொந்தக்காலில் வேலைக்கு சென்று நிற்க தவிக்கும் பெண்ணான அஞ்சலிக்கு, பெரிய அளவில் தன் கணவன் குடும்பத்தாரால் துரோகம் நடக்க,
சாதி வெறி பிடித்த தந்தையாக தலைவாசல் விஜய், தனக்கு தெரியாமல் நடக்கும் தன் மகளின் திருமணத்தை தடுக்க புறப்பட, இடையில் என்ன நேரிடுகிறது ?? இவர்கள் அனைவரும் நினைத்தார் போல அவர்களின் வாழ்க்கை அமைந்ததா ?? விதி அவர்கள் வாழ்க்கையில் என்ன மாதிரியான மாற்றங்களை ஏற்படுத்தியது என்பதே மீதி கதை..

ஒவ்வொரு கிளை கதையிலும் வரும் கதாபாத்திரங்கள் அனைத்தும் கதையினை உள்வாங்கி அருமையாக நடித்துள்ளனர்..

நான்கு கதைகளின் பயணங்களுக்கு எந்தவித சம்மந்தமும் இல்லை என்றாலும், அவற்றை சம்மந்தப்படுத்தி பயணிக்கும் துப்பாக்கியின் பயணத்தை லான் லீனர் முறையில் அருமையாக தொகுத்து கொடுத்திருக்கிறார் படத்தொகுப்பாளர் ஷான் லோகேஷ்
ஜோஸ்
பிராங்க்ளின் இசையில்
கே.எஸ்.காளிதாஸ் இன் ஒளிப்பதிவில் இப்படம் பெண்களுக்கு எழுச்சி தரும் படமாக வந்திருக்கு…