
ஆரியன் ஷியாம், இயக்குனர் வி.வி.கதிரேசன் இணைந்து எழுதி இருக்கும் படம் “அந்த நாள்”
ஆர்யன் ஷ்யாம் கதாநாயகனாக களம் இறங்க, இவருடன் கதை யின் நாயகிகளாக,
ஆத்யா பிரசாத். லிமா பாபு மற்றும் இவர்களுடன், இமாம் அண்ணாச்சி ஆகியோர் நடித்துள்ளனர்..
இயக்குனரான ஆர்யன் ஷியாம் தனது புதிய படத்தின் டிஸ்கஷனுக்காக, துணை உதவியாளர்கள் மற்றும் தங்களுக்கு சேவை செய்ய ஒருவருடனும், தொலை தூரத்தில் உள்ள பஞ்சமி பங்களாவிற்கு செல்கின்றனர்… சென்ற நாளன்றே, இரவில் சில அமானுஷ்ய சம்பவங்கள் நடக்க, திகிலில்
உறைந்து போக, அவர்களுக்கு ஒரு கேமிரா கிடைக்கிறது…அதில் இருக்கும் பதிவுகளை பார்த்த படக்குழு உயிர் பிழைத்தால் போதும் என்று, அங்கிருந்து அவர்கள் ஒட்டம் பிடிக்கின்றனர்…ஆனால் அதற்கு முட்டு கட்டாக மேலும் பல நிகழ்வுகள் தொடர்ந்து நடக்க, அவர்களால் அந்த இடத்தை விட்டு வெளியேற முடியவில்லை.
இந்நிலையில் பங்களாவுக்குள்ளேயே மர்ம மனிதர்களால் கொலை முயற்சி நடக்க, அதில் இருந்து அவர்கள் தப்பிதார்களா?? அவர்களின் நிலை என்ன ?? என்பதே மீதக்கதை..
தனது முதல் கதையிலையே, சில குறிப்புகளை ஆராய்ந்து,த்ரில்லிங்கான கதையினை தேர்ந்தெடுத்து அதில் நாயகனாக நடித்திருக்கும் ஆர்யன் ஷ்யாம் முதல் பாதியில் அமைதியாகவும், இரண்டாம் பாதியில் வேறு விதமாகவும், நடித்து, சிறப்பான நடிப் பினை வெளிபடுத்தியிருக்காரு… ஆ த்யா பிரசாத், மற்றும் லீமா பாபு அழகாக இருப்பதுடன் திகில் கதைக்கு ஏற்ப முழிக்கும் முழி அழகு…
என். எஸ். ராபர்ட் சற்குணம் இசையில், சதிஷ் கதிர்வேல் ன் ஒளிப்பதிவில் “அந்த நாள்” திகில் கலந்த விறு விருப்பான படமாகும்…