திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் மற்றும் தங்கம் சினிமாஸ் சார்பில் சி வி குமார் மற்றும் எஸ் தங்கராஜ் தயாரிப்பில், எஸ்.ஜெ.அர்ஜுன் இயக்கத்தில், மிர்ச்சி சிவா நடித்து வெளி வந்திருக்கும் படம்..சூது கவ்வும் 2..

இப்படத்தில்சிவா, ஹரிஷா ஜஸ்டின், கருணாகரன், வாகை சந்திர சேகர்,பாஸ்கர், கவி, கல்கி, அருள் தாஸ், ஜேபி, கராத்தே கார்த்தி, ராதா ரவி ஆகியோர் நடிச்சிருகாங்க

முதல் பாகமான சூது கவ்வும் படத்தில் விஜய் சேதுபதி தமக்கென்று சில தொழில் தர்மங்களோடு கடத்தல் தொழில் செய்து வந்தாரோ, அதன் தொடர்ச்சியாக, சூது கவ்வும் 2 இல் மிர்ச்சி சிவா, ஆள் கடத்தல் தொழிலை செய்து வருகிறார்….முதல் பாகத்தின் இறுதியில் அரசியலில் அடியெடுத்து வைத்த கருணாகரன் இப் பாகத்தில் ஊழல் செய்து மூன்று முறை அமைச்சராகிறார்… ஊழல்வாதி கருநகருனை மிர்ச்சி சிவா கடத்த பின் என்ன நேர்ந்தது என்பது தான் கதை….

கற்பனை காதலி உட்பட முந்தைய படத்தை போலவே இப்படத்திலும் பல காட்சிகள் இருக்க, சில டார்க் காமெடி நன்றாகவே ஒர்க் ஆவுட் ஆகியிருக்கிறது

வழக்கம் போல மிர்ச்சி சிவா காமெடி யில் கலக்க,

எட்வின் லூயிஸ் விஸ்வநாத் இசையில் பாடல்கள் சிறிது கேட்கும் ரகமாக இருந்தாலும், அதோடு சேர்ந்து ஹரி எஸ்.ஆரின் பின்னணி இசையில் படம் வேகமெடுக்கிறது….