
ஆர் எஸ் இன்ஃபோ டைன்மெண்ட் மற்றும் கிராஸ் ரூட் ஃபிலிம் கம்பெனி இணைந்து தயாரிக்க
வெற்றி மாறன் இயக்கத்தில்,
சூரி, விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர், கிஷோர் , கென் கருணாஸ் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் விடுதலை 2..
முதல் பாகத்தில் ரயில் விபத்து ஒன்று நேரிட, அதற்கான காரணகர்த்தா வான பெருமாள் வாத்தியாரை, சாதாரண சூப்பிரேடென்ட் ஆன சூரி மடக்க, அவர் கைதாகிறார்…அதோடு விடுதலை ஒன்று படம் முடிவாக, அதன் தொடர்ச்சியாக, விடுதலை 2 வில் பெருமாள் வாத்தியார் யார் ?? அவருக்கும் ரயில் விபத்துக்கும் என்ன சம்பந்தம்? அவரது காதல் குடும்பம், மக்கள் அரசியல் என அவரை சுற்றியே அமைந்துள்ளது விடுதலை 2 வின் கதை…
பெருமாள் வாத்தியாராக விஜய் சேதபதி கென் கருணாஸ் கொலை செய்யப்படும் இடத்தில், தன்னால் காப்பாற்ற முடியவில்லை என்று ஆதாங்கப்படும் இடத்திலும் சரி, தன் குருவான கிஷோரை தேட செல்லும் இடத்திலும் சரி, காட்சிகளை தன் கண்களாலேயே காட்சி படுத்திவிடுகிரார் ..
கென் (கருப்பன்,) கும் பண்ணையாருக்கும் இடையே யான சண்டை காட்சியில் கென் இன் நடிப்பு… மிரட்டல்
முதல் பாகத்தை போன்று இல்லாமல் ஆங்காங்கே சூரியின் குரல் ஒலித்தாலும், வந்து போகும் சிறு இடங்களிலும் தன் நடிப்பால் ஸ்கோர் செய்து விடுகிறார்… கிளைமாக்ஸ் முத்தாய்ப்பு…
ராஜிவ் மேனன், கிஷோர், இளவரசு, மஞ்சுவாரியர் குடுத்த கதாப்பாத்திரத்தை ஏற்று கச்சிதமாக நடிக்க,
அனைவராலும் வெறுக்கும் அளவிற்கு அற்புதமாக நடிச்சிருக்கார் சேத்தன் …
முதல் பாகத்தில் வரும் ரயில் விபத்து, அதற்கான காரணம், அதற்குள் ஒரு அரசியல், அதனால் ஏற்படும் அலட்சியம், அரசாங்கத்தின் சதி என அத்தனையையும் தோலுரித்து காட்டியிருக்கிறார் இயக்குனர் வெற்றிமாறன்..
இவரோடு கை கோர்த்து இன்றைய இள சுகளுக்கு நடுவில் இன்னும் இளமையாய் இளையராஜாவின் இசயமைப்பில், வேல்ராஜ் இன் ஒளிப்பதிவில்…விடுதலை 2…சிறப்பு…