
கன்னட நடிகர் உபேந்திரா எழுதி இயக்கி, நடித்திருக்கும் படம் ui..
நாமம் அடையாளத்தை தலைப்பாக கொண்டு திரைப்படம் ஒன்று வெளியாக, அப்படத்தை பார்த்த ரசிகர்கள் சிலர், சிலாகித்து போய் எதையும் டேக் இட் ஈஸி என எடுத்துகொண்டு செல்ல, சிலர் அப் வன்மையாக கண்டித்து போராட்டம் நடத்த, ஒரு தொலைக்காட்சி நிறுவனம் அப்படத்தின் கதை என்னவென்று, ஒரு பிரபல விமர்சகரை கேட்க, அவரும் எனக்கு புரிந்து விமர்சனம் சொல்ல சிறிது கால அவகாசம் கொடுங்கள் என்று கேட்கிறார். அதோடு நில்லாது அந்த
இயக்குநர் ஐ சந்திக்க அவர் தங்கிய ஹோட்டல் செல்கிறா ர்..அங்கு அந்த இயக்குனர் வேண்டாம் என உதறிய எரிந்து போன காகிதத்தை சேர்த்து படிக்க துவங்குகிறார் .. இறுதியில் விமர்சகருக்கும், நமக்கும் விடை கிடைத்ததா என்பதே இப்படத்தின் கதை.
படத்தின் ஆரம்பத்திலேயே புத்திசாலிகள் உடனே வெளியேரவும்..என்ற டைட்டிலை போட்ட உபேந்திரா வின் தைரியத்தை பாராட்டியே தீர வேண்டும்….
உலகில் முதன் முதலில் ஆதாமும் ஏவாளும் தோன்ற, ஏவாள் ஆப்பிளை கடித்ததும் உலகம் எப்படி மாறி சந்தை மயமாகிறது என்று காண்பித்து, கடவுள் கல்கி அவதாரம் எடுத்தால் சாதி மதம் என பிரிவினை படுத்தி, ஒரு புறம் டெக்னாலஜி யின் முன்னேற மறு புறம், பசி பட்டினி, ஏழ்மை என அதள பாதாளதிற்குள் உலகம் செல்கிறது என்பதை காட்சி மூலமாக கற்பனை சேர்த்து சொல்லியிருக்கிறார்..