டி.ஜி பிலிம் கம்பெனி, மாக்னஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிக்க, சக்திவேல் பெருமாள்சாமி இயக்கத்தில் குணா நிதி, காளி வெங்கட், செம்பன் வினோத், சரத் அப்பாணி ஶ்ரீ ரேகா ஆகியோரின் நடிப்பில் வெளயாகி இருக்கும் படம் அலங்கு…

மலை வாழ் கிராமத்தில் இருக்கும் குணா நிதி மற்றும் அவரது நண்பர்களிடம் ஒரு மூட்டை ஒன்றை கொடுத்து அவரது முதலாளி புதைக்க செல்ல, அதற்கு வுயிர் இருப்பதை தெரிந்து, அதை கொல்லாமல், அதற்கு, காளி(நாய்) என்று பெயரிட்டு செல்லமாக வளர்க்கிறான் கதாநாயகன்..
அவனின் அம்மாவோ தன் கணவனை யானை மிதித்து கொன்றதையும் பெரிதாக எண்ணி பயப்படாமல், அந்த காட்டை நம்பி, தன் பசங்களை வளர்க்கிராள்..அப்படி இருக்கையில் வட்டிக்காரரிடம் அசிங்கப்பட, அதனை பார்த்த தர்மன் அம்மாவின் கடனை அடைக்க , கேரளாவில் உள்ள ரப்பர் தோட்டத்திற்கு வேலைக்கு செல்கிறான்…
மகளின் பால் பேரன்பு கொண்ட செம்பன், தன் மகளின் பிறந்த நாள் விழாவை வெகு விமர்சையாக கொண்டாட, நாய் ஒன்று அவரது மகளை கடித்து விடுகிறது..கோவபட்ட செம்பன் அருகாமையில் இருக்கும் அனைத்து நாய்களையும் கொன்று விட சொல்லி அடியாளன சரத் ஐ ஏவி விடுகிறான்… அவனும் பல நாய்களை கொன்று குவித்து, இறுதியாக காளி பக்கம் செல்கிறான், அதை தடுக்க வந்த குணா நிதி யம் சரத் ம் சண்டையிட, கத்தி சரத்தின் கையை வெட்டிவிட, பிறகு என்னாகிறது? காளி தப்பித்ததா? என்பதே மீதிக்கதை…

தர்மன் கதாபாத்திரத்தில் குணா நிதி, அன்பு, பாசம், கோபம் என கிடைக்கும் அத்தனை இடங்களிலும் நடிப்பில் ஸ்கோர் செய்து விடுகிறார்…தமிழுக்கு புது வரவு, நல்வரவு..

அளவுகடந்த பாசத்தால் நிலை தடுமாறும் செம்பன்…நல்ல தேர்வு

மிரட்டும் விழிகளால்…அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் அசத்தலான நடிப்பை கொடுத்த ஶ்ரீ ரேகா..

சரத் அப்பாணி மற்றும் காளி வெங்கட் நேர்த்தியான நடிப்பினை வழங்க,

அஜிஷ் இசையில் அலங்கு..எல்லா வுயிரும் ஒன்னு தான் என்று சொல்லும் பாடம்…