ஜெகதீஷ் தயாரிப்பில்
ஷான் நிகம், கலையரசன் நடிப்பில் வெளியாகியுள்ள படம் மெட்ராஸ்காரன்
சென்னையில் வேலை செய்யும் சத்யா (ஷேன் நிகம்), அவருடைய காதலியும் மணப்பெண்ணுமான மீரா (நிஹாரிகா), வை கைப்பிடிக்க திருமணத்துக்காக, புதுக்கோட்டை செல்கிறார்..அங்கு செல்லும் வழியில், ஏற்கனவே அரங்கேற இருக்கும் ஓர் சம்பவத்திற்க்காக காத்திருக்கும் கலையரசனுக்கும் இவருக்கும் சின்ன பஞ்சாயத்து ஏற்பட, சத்யா வை மன்னித்து கலையரசன் கிளம்பி விடுகிறார்…பிறகு விடுதியில் தங்க வைக்கப்பட்டிருக்கும் மணபெண்ணை காண, செல்போன் பேசியபடி காரை ஓட்டிச் செல்கிறார் சத்யா. அப்படி செல்லும் வழியில் தவறுதலாக நிறைமாதக் கர்ப்பிணியான கல்யாணி (ஐஸ்வர்யா தத்தா) மீது காரை மோதிவிட, அந்த ஊர் மக்கள் சத்யாவைப் பிடித்து அடித்து துவைக்க நேரிடுகையில், கல்யாணியின் அண்ணன் நெடுமாறன், மற்றும் அவரது கணவர் கலையரசன் (துரை சிங்கம்) வந்து சேரவே, அங்கு பெரிய கை கலப்பு நேரிடுகிறது..இதில் விபத்து நேர்ந்த கல்யாணிக்கும் அவரது வயிற்றில் இருந்த சிசு வுக்கும் என்ன நேர்ந்தது ?? விடிந்தால் நடக்கவிருக்கும் திருமணம் நடந்ததா? இல்லையா என்பதே மீதி கதை..
கதாநாயகன் ஷான் நிகம் மலயாள வரவு என்று தெரிந்த போதும், முடிந்த அளவிற்கு தமிழில் பேசியிருப்பது வரவேற்க தக்க ஒன்று…தான் தான் குழந்தையின் சாவிற்கு காரணம் என்று தெரிந்து கலங்கும் போது நல்ல நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்..மேலும் நடனத்திலும் அபாரம்.. கீதா கைலாசம் மற்றும் கருணாஸ் நடிப்பு கவனிக்கும் வகையில் இருக்கு…
புதுக்கோட்டை அதன் சுற்று வட்டாரப் பகுதிகளைத் தனது ஒளிப்பதிவில் அழகாகப் பதிவு செய்திருக்கிறார்.. ஒளிப்பதிவாளர் பிரசன்னா எஸ்.குமார். சாம் சி.எஸ். இசை படத்திற்கு பக்க பலம்..
மெட்ராஸ்காரன் – திரையில் விறுவிறுப்பு..