சுரேஷ் காமாட்சி மற்றும் Bஸ்டுடியோஸ் தயாரிப்பில், பாலா இயக்கத்தில் அருண் விஜய்,
ரோஷ்ணி பிரகாஷ், ரிதா ஆகியோரின் நடிப்பில் வெளி வந்திருக்கும் படம் வணங்கான்..
கன்னியாகுமரி யில் காது கேளாமல், வாய் பேசவும் வராமல், தனது தங்கையுடன் வாழ்ந்து வருபவர் கோட்டி.(அருன்விஜய்) .தங்கை மீது அளவு கடந்த பாசத்தை வைத்து வரும் அவர், தங்கை யோடு வெளியில் செல்ல, வழியில் சிலர் திருநங்கைகளை அடிப்பதை பார்த்து, கான பொறுக்காமல், அவர்களை அடித்து உதைத்து துவம்சம் பண்ண, அவர்களும் தப்பித்தால் போதும் என போலீஸ் ஸ்டேசன் ஓட, போலீஸ் தடுத்தும் அவர்களை பின்னி பெடல் எடுத்து விடுகிறார்… அப்படிப்பட்ட அவருக்கு நிலையான வேலை எதும் இல்லாததால், அவர் மேல் அண்பு கொண்ட சர்ச் ஃபாதர், ஆதரவற்றோர் இல்லத்தில் செக்யூரிட்டி வேலை வாங்கி கொடுக்க, அங்கு வேலை செய்யும் மற்ற இரு நபர்கள் கொலை செய்யப்படுகின்றனர்…அந்த கொலையை நான் தான் செய்தேன் என்று தானாக முன் வந்து ஆஜர் ஆகிறார் அருண்விஜய்…அவர் தன் அக்கொலையை செய்தாரா ?? அக் கொலைக்கு காரணம் என்ன ? என்பதே மீதிக்கதை..
கொலைக்கான காரணத்தை கண்டு பிடிக்கும் போலீஸ் அதிகாரியாக சமுத்திரக்கனி, மிடுக்காக கன கச்சிதமான தேர்வு… சிறப்பு தோற்றத்தில் மிஷ்கின்.. ரோஷினி பிரகாஷ் மற்றும் ரிதா சைகை மொழியில் சிறப்பான நடிப்பை தந்திருக்காங்க..
கதாநாயகன் அருண் விஜய் நடிப்பு மிரட்டல். இது வரை காணாத நடிப்பு… வாய் பேச இயலாதவராக நடித்து நம்மை கலங்க வைத்துவிட்டார். ஒவ்வொரு காட்சியிலும் இவர் மட்டுமே ஸ்கோர் செய்கிறார். எமோஷனல் காட்சிகளில் அனல் தெறிக்கும் இவருடைய கண்களும், முக பாவங்களும் காட்சியை விளக்க, அப்படியோர் நடிப்பு…
கிளைமேக்ஸ் காட்சி அருமை.. சாம் சி எஸ் இசையில் ஜி. வி. பாடல் வரிகளில் வணங்கான்..அனைவரும் பார்க்க வேண்டிய படம்..4/5