
ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் மணிகண்டன் சான்வி, குரு சோமசுந்தரம், ஆர் சுந்தர்ராஜன் ஆகியோர் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் குடும்பஸ்தன்..
இசை – வைசாக்
ஒரு விடியல் வேளையில், காதலனுடன் வீட்டை விட்டு ஓடி வந்து, தன் காதலியை கரம் பிடிக்க, மணிககண்டன் நண்பர்களை நாட, ஒரு வழியாக வீட்டை எதிர்த்து ரிஜிஸ்டர் கல்யானம் செய்கிறார். அங்கிருந்து கதை தொடங்குகிறது…இரு வீட்டாரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து, சாபம் விட்டு செல்ல, அவர்கள் முன்பு நன்றாக வாழ வேண்டும் என்ற குறிக்கோளுடன் வாழ செய்கிறார்கள் தம்பதியினர்.
மணிகண்டன் அக்கா கணவர் குரு சோமசுந்தரம், மணிகண்டன் செய்யும் எல்லாவற்றிற்கும் அவரை அவமானப்படுத்த காத்திருக்கும் கேரக்டர்.. கொஞ்சம் சருக்கினாலும் அவரை அவமானப்படுத்துவதே தன்னோட குறிக்கோளாக காத்திருக்கும் மாமா.. இந்நிலையில்
ஒரு சந்தற்பத்தில் மணிகண்டனுக்கு வேலை போக, அதை குடும்பத்தாரிடம் இருந்து மறைத்து குடும்பத்தை காப்பாற்ற, ஆன்லைன் இல் கடன் வாங்கி அதன் வட்டியை கட்ட முடியாமல், பல பொய்களை சொல்லி படாத பாடு பட்டு வாழ்க்கை யை நகர்த்த, இவரது அம்மா, அப்பாவின்
60வது கல்யாணத்தில், மணிகண்டனின் வேலை போனது தெரிந்த குரு சோமசுந்தரம் , மைக் போட்டு அவரது சொந்தங்கள் முன்னிலையில் மணிகண்டனை அவமானப்படுத்த, மணிகண்டன் சிக்கல்கள் அனைத்திலிருந்தும் மீண்டு
வந்தாரா? என்பதே குடும்பஸ்தன்…
சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து, நடிக்க தெரிந்து வைத்திருக்கிறார் மணிகண்டன். கடன் வாங்கியாவது குடும்பத்தை காப்பாற்ற நினைக்கும் ஒவ்வொரு சாமானிய மனிதனின் பிம்பமாக அச்சு அசலாக நடித்திருக்கிறார் மணிகண்டன்..
குரு சோம சுந்தரம், இப்படியொரு கேரக்டர் அனைத்து வீட்டிலேயும் இருக்கும், எது செய்தாலும் குறை கண்டு பிடிக்கும் குணம் அதோடு சேர்ந்த, எரிச்சலூட்டும் நமட்டு சிரிப்பு, அத்தனை லாவகமாய் வடம் பிடித்து, அந்த கதாப்பாத்திரத்தை செய்துள்ளார்..
புது முகம் சான்வி தமிழுக்கு ஏற்ற களையான முகம், அளவான நடிப்பு.
பாதி நக்கலைட்ஸ் கதாபாத்திரங்கள், அனைத்தும் நடிப்பில் சிறப்பு..
படத்தின் முதல் பாதி சிரிப்போ சிரிப்பு என்றால் களைமக்ஸ் காட்சி சிரிப்பின் உச்சம்… குடும்பங்கள் பார்க்க வேண்டிய படம் 3.5/5